நடந்த உண்மை சம்பவம் !! என்னிடம் வேலை செய்பவர் பேயை பார்த்ததாக சொன்னார், நான் சொன்னேன் பேய்யென்று ஒன்று இல்லை அது ஒரு பிரம்மை என்று, அதற்கு அவர் சொன்னார் பேய் இருப்பது உண்மை அது சிலர் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்றார், நான் சொன்னேன் ஆமாம் சிலருக்கு மட்டும்தான் தெரியும் ஏன் தெரியுமா! நம் கண் ஒரு காட்சியை பார்த்து மூளைக்கு செய்தியை அனுப்புவதால் தான் நாம் பார்க்கும் பொருள் நமக்கு தெரிகின்றது. இரவு நேரத்தில் சிலருக்கு கண் பார்க்காமலேயே மூளையில் ஏற்கனவே பதிவு செய்ய பட்டிருக்கும் கற்பனை காட்சியை கண் பார்த்ததாக முளை எடுத்துக்கொண்டு பேயைப் பார்த்தது போல் தோற்றத்தை பலருக்கு கொடுத்துவிடும் இது ஒருவகை மூளையின் கோளாறு என்றேன். அதன் பிறகு பேய் அவர் கண்ணுக்கு தெரிந்தால் சுதாரித்துக் கொண்டு பார்ப்பார் பேய் இருக்காது. இது போல் தான் கடவுளை உணர முடியும் என்று உள்ளே தேடு, வெளியே தேடு என்று மக்களை சாமியார்கள் ஏமாற்றுகின்றார்கள். என் பார்வையில் சாமியாரிடம் கடவுள் சக்தி இருக்கு, அவர் கடவுளை உணர வைப்பார் என்று செல்கின்றவர்கள் அனைவரும் மூளையின் செயல்பாட்டில், சிந்தனையில் கோளாறு உள்ளவர்கள்தான் அவர்களை நான் பரிதாபமாக பார்க்கின்றேன்.