மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர்
16 September 2018by
Vijayakumaran
மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர். (ஓபிஎஸ், இபிஎஸ், பட்டை போட்டு கொள்வது போல்) உண்மையில் 99. 9 % சதவிகிதத்தினர் கடவுள் இருக்கு என்பதை நம்பவில்லை என்பது தான் உண்மை.
எதையும் முயற்சிக்காமல் கடவுளையே நம்பியிருந்தால் மனித இனம் எப்பொழுதோ அழிந்திருக்கும்.
நம் உள் மனது கடவுளை நம்பி கொண்டு இருக்க வேண்டாம் என்று சொல்வதால் தான் நாம் முயற்சிக்கின்றோம்.
நம் முன்னோர்கள் கடவுளை நம்பவில்லை என்பதற்கு சான்று நாம் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது தான். உழைக்காதவன் கோயிலுக்குள் பிச்சை எடுக்கிறான்,
உழைக்க முடியாதவன் கோயிலுக்கு வெளியில் பிச்சை எடுக்கிறான்,
கோயிலில் இருக்கின்ற இருவருக்கும் கோயிலுக்கு வருகின்றவர்களே கடவுளாகத் தெரிகிறார்கள்.