கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கடவுளையும் நம்பாமல் நான் நாத்திகனாக தான் இருந்தேன்.
இறந்த காலத்தின் தொடர்போடுதான் நம்முடைய சிந்தனை முதல் உலக நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்கின்றது. அணுவின் அசைவு முதல் பிரபஞ்சத்தின் இயக்கம் வரை அனைத்தும் விதியின் பயனே. என்னுடைய அசைவு ஒவ்வொன்றையும் இயற்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக என்ற என்னுடைய புரிதலால் என்னுடைய பார்வை தெளிவாகிவிட்டது, கடவுள் இருக்கா? இல்லையா? என்ற சந்தேகம் என்னை விட்டு போய்விட்டது, என்னுடைய சிறு அசைவையும் CCTV camera வை போல் இயற்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர் வினைக்காக என்ற என்னுடைய புரிதல் என்னை உண்மையான ஆத்திகனாக மாற்றிவிட்டது. கடவுள் இருக்கு என்று கடவுளை நம்பிய போது தெளிவு இல்லாமல் இருந்த நான் கடவுள் இல்லை என்பதை அறிவியல் ஆதாரத்தோடு புரிந்து கொண்டதும், நம் கையில் எதுவும் இல்லை அனைத்தும் விதியின் பயன்தான் என்பதை புரிந்து கொண்டவுடன் இயற்கையிடம் சரண்அடைந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் இயற்கையை வணங்கி இன்று நாம் செய்யும் செயல்தான் நாளை நம்முடைய விதி என்பதை உணர்ந்து நேர்மையாகவும் ,ஒழுக்கத்தோடும், இயற்கைக்கு பயந்து இயற்கை என்னை பார்த்துக் கொண்டே இருப்பதாக எண்ணி வாழ்கின்றேன்.
நான் வணங்கும் இயற்கை எனும் கடவுள் எனக்கு துணையாக என்னை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கின்றது என்ற புரிதல் என் வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.