கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்!
கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றார். இந்த பிரபஞ்சத்தை இயக்குபவர் தான் கடவுள் என்ற ஆன்மீகவாதிகளின் புரிதலோடு நானும் உடன்பட்டு அறிவியலின் உதவியுடன் கடவுளைப் பற்றி ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.
உயிர் நம்மை இயக்கினாலும் உயிரை நாம் பார்க்க முடியாது, அது போல் கடவுள் இந்த பிரபஞ்சத்தை இயக்கினாலும் கடவுளை நாம் பார்க்க முடியாது.
நான் ஆன்மீகவாதியாக இருந்தாலும் அறிவியல் படி கடவுளை ஆய்வு செய்வதால் பலர் என்னை நாத்திகனாகவும் பார்க்கின்றார்கள்.
அறிவியல் படி தொடர்வினை தத்துவத்தின்படி தான் இந்த பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கின்றது, நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுகளுக்கு காரணம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு காரணம், இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுவின் அசைவுக்கும் எதிர்வினை உண்டு, அதை யாராலும் தடுக்க முடியாது. இதன் பொருள் ஒவ்வொரு அணுவையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கின்றார் எதிர்வினைக்காக என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த பிரபஞ்சத்தை இயக்கும் தொடர்வினை என்ற இறைவன் ஒவ்வொரு அணுவின் செயலையும் கவனிக்கின்றார் என்ற அறிவியல் புரிதல் நமக்கு இருந்தால் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றார் எதிர் வினைக்காக என்று புரிந்து கொள்ள முடியும்.
என்னுடைய ஆய்வின்படி கடவுள் இல்லை, தொடர்பினை தான் கடவுளைப் போல் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றது, இந்த தொடர்வினையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.
கடவுளை வணங்குவதால் ஒருபோதும் நாம் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்காது !
இந்த உலகில் யாரும் கடவுளின் தூதரும் அல்ல முகவருமல்ல !
நம்முடைய நேர்மையான செயலால் மட்டுமே தொடர்வியின்படி நாம் நன்மையை பெற முடியுமே தவிர ஆன்மீகவாதிகளின் போலியான செயலால் ஒருபோதும் நன்மைகள் கிடைக்காது !
என்னுடைய ஆய்வின்படி உறுதியாக நான் புரிந்து கொண்டது கடவுள் என்ற தொடர்வினை தத்துவம் நம் செயலை பார்த்துக்கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக என்பதே, இதை அறிவியல் அறிவு உள்ளவர்கள் புரிந்து நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் செயல்பட்டால் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நல்லது. புரிந்து கொள்ள முடியாதவர்கள் நான் சொல்வதை நம்புங்கள் இது சத்தியம் ! யாரும் பார்க்கவில்லை என்று ஒருபோதும் எந்த தவறும் செய்யாதீர்கள் நிழலைப்போல் தொடர்பினை என்ற தத்துவ கடவுள் உங்களை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்.