கடவுள் நம்பிக்கையை கடவுளை மறுப்பவர்கள் புண்படுத்த கூடாது என்று போராடும் நண்பர்களே,கடவுள் இல்லை என்று நம்பும் கடவுளை மறுப்பவர்களிடம் கடவுள் இருக்கு என்று சொல்லி நீங்கள் புண்படுத்துவதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்.
காவடி எடுத்து, சாலையில் கோசம் போட்டு, நம் நம்பிக்கையை வெளிபடுத்த நமக்கு உரிமை இருக்கும்போது, அதே சாலையில் கடவுள் இல்லை என்று அவருடைய நம்பிக்கையை வெளிபடுத்துவதில் என்னகுற்றம் உள்ளது.
கடவுள் மறுப்புதான் இந்த சமூதாயத்தின் சமத்துவத்துக்கு அடித்தளம் என்பது வரலாறு. அதுபோல் கடவுள் நம்பிக்கையும் நம் மண அமைதிக்கு அடித்தளம்.ஒன்று அறிவு, மற்றொன்று உணர்வு இரண்டும் நம் இரண்டு கண்கள்.
மனிதனுடைய வளர்ச்சி அனைவரின் கருத்தையும் உள்வாங்கிக் கொள்வதில்தான் உள்ளது.