ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடினால் தான் முதல் பரிசை பெற முடியும்.இரண்டாவது இடத்தில் ஓடுகின்ற ஒருவன் ரசிகர்களின் உற்சாகத்தால் முதல் இடத்தைப் பிடிக்கின்றான்.ரசிகர்களின் உற்சாகம் ஒருவனுக்கு எப்படி சக்தியை கொடுத்திருக்கும்.அறிவியல்படி வாய்ப்பே இல்லை,ஆனால் அனுபவரீதியாக உண்மை.ரசிகர்களின் உற்சாகம் இரண்டாவது இடத்தில் ஒடுபவனுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது,அந்த நம்பிக்கைதான் அவனை முதலிடத்தில் வெற்றிபெற செய்துள்ளது.இது போல் நோயால் பாதிக்கப்பட்டவர் கடவுளை வணங்குவதால் அவருக்குள் நம்பிக்கை பிறக்கிறது அது அவருடைய நோயை குணப்படுத்துகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை.கடவுள் இல்லை ஆனால் கடவுளை வணங்குவது தவறு இல்லை என்பதை புரிந்துகொண்டால் மதக்கலவரம் இருக்காது.