நம்பிக்கை புரியாமையின் வெளிப்பாடு. கடவுளைப்பற்றி நமக்கு புரியவில்லை என்றால் அதைப்பற்றி முன்னோர்கள் சொன்னதை நம்பி தான் ஆக வேண்டும், இதுவே கடவுள் நம்பிக்கை.
கடவுள் மறுப்பு என்பது அறியாமையின் அல்லது உணராமையின் வெளிப்பாடு.கடவுள் நம்பிக்கையால் ஒருவர் பெறக் கூடிய பலனை உணராமல் கடவுள் இல்லை என்பது அறியாமை.
கடவுளைப்பற்றி ஆத்திகர்களும், நாத்திகர்களும், பேசிக் கொள்வதைப் பார்த்தால் எனக்கு மிகவும் நகைச்சுவையாக தெரிகின்றது.
கடவுள் நம்பிக்கை என்பது கைத்தடியை போன்றது, அதை பிடுங்குவது பாவம். கைத்தடியை பயன்படுத்துபவர்கள் தானாகவே தூக்கிப் போடும் அளவுக்கு ஆரோக்கியத்தை (அறிவை )அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் ஏன் கைத்தடியை பயன்படுத்த போகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை உளவியல் சார்ந்தது, இதற்கு மாற்று விதி. விதி அறிவியல் உண்மை என்ற புரிதலால் மட்டுமே இந்த சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். இதற்கான சான்று நான் எழுதிய “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற புத்தகத்தில் உள்ளது.இதை பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும், நாத்திகர்களும், புரிந்து கொள்ளாமல் கடவுள் இல்லை என்று சொல்வதால் எந்த பயனும் இல்லை. அவர்களுடைய குடும்பமே அவர்களுடைய கருத்தை ஏற்றதாக தெரியவில்லை.
நாத்திகர்கள் எப்போது விதி உண்மை என்பதை புரிந்து கொள்கின்றார்களோ அப்போதுதான் ஆத்திகர்களும் கடவுள் இல்லை என்பதை புரிந்து கொள்வார்கள்.