நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது.
கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல்லாத சமுதாயத்தில் இருந்து தான் கடவுள் நம்பிக்கை முற்போக்கு சிந்தனையாக உருவாகி உள்ளது.சீனாவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதிகம், எனவே கடவுள் இல்லை என்று சொல்வது முற்போக்கு சிந்தனை அல்ல.
கற்கால மனிதனின் முற்போக்கான சிந்தனை தான் ஆத்திகம். தன்னுடைய வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால்தான் மனிதன் கடவுளை நம்புகின்றான்.
நாத்திகமும், ஆத்திகமும் மனிதனின் இரண்டு சித்தாந்தங்கள் இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது ஆனால் என்னுடைய புதிய சித்தாந்தத்தில் இரண்டும் சங்கமமாய் இருப்பது தான் சிறப்பு.
நாத்திகமும்,ஆத்திகமும் நம்முடைய வாழ்க்கையை மேன்மைப்படுத்திக் கொள்ள தேவையான ஆயுதம், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் தெரியாததால் தான் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு முட்டாள்களாக வாழ்கின்றார்கள். (முட்டாள் என்ற இடத்தில் அறியாமை என்று என்னால் எழுத முடியவில்லை காரணம் பலமுறை நான் இதை எழுதியும் இந்த சமுதாயத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவர்கள் முட்டாள் தானே !)
நாத்திகத்திலும் அறிவியலோடு ஒத்துப் போகக்கூடிய நம்பிக்கைகள் இருக்கின்றது, ஆத்திகத்திலும் அறிவியலோடு ஒத்துப்போகக்கூடிய நம்பிக்கைகள் இருக்கின்றது.
ஆத்திகனின் விதி உண்மை என்ற நம்பிக்கை அறிவியல் உண்மை. இந்த அறிவியல் உண்மையை நாத்திகன் விதி உண்மை அல்ல என்ற நம்பிக்கையில் இருந்து விடுபட்டு விதி உண்மை என்பதை புரிந்து கொண்டால் நாத்திகனின் கடவுள் இல்லை என்ற நம்பிக்கை அறிவியல் உண்மையாகி விடுகிறது.
ஆத்திகன் கடவுள் உண்மை என்ற நம்பிக்கையில் இருந்து விடுபட்டு விதி உண்மை என்ற நம்பிக்கையை புரிந்து கொண்டால், கடவுள் இல்லை என்பதும் கடவுளைப் போல் தொடர்வினை எனும் இயற்கை தான் நம்மை இயக்குகின்றது என்ற புரிதலோடு இரண்டு சித்தாந்த நம்பிக்கையான “விதி உண்மை “என்ற நம்பிக்கையும் “கடவுள் இல்லை “என்ற நம்பிக்கையும் ஒன்றிணைந்தால் அனைவரும் சமம் என்ற சமத்துவம் உருவாகும்.
விதி என்ற முடிச்சை அவிழ்த்தால் மட்டுமே ஆன்மீகம் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். அதற்கு நான் எழுதிய “குமார் விதிகள் “என்ற புத்தகம் ஒன்றே தீர்வு.