கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு கைத்தடியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறும்போது கைத்தடி போதைப் பொருளாக மாறி அவர்களின் உழைப்பையும், பொருளையும், அறிவையும், அழித்து விடுகின்றது.
கடவுள் இல்லை என்ற கருத்தை உடையவர்கள் கடவுளை நம்பாததில் எந்தத் தவறும் இல்லை. அதுபோல் கடவுள் இருக்கு என்ற கருத்தை உடையவர்கள் கடவுளை நம்புவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் கடவுள் இருக்கு என்று நம்புவார்களில் பெரும்பாலானவர்கள் தான் வணங்கும் எந்த கடவுளையும் அவர்கள் நம்புவது இல்லை என்பதுதான் உண்மை.
இதன் வெளிப்பாடு தான் இவர்கள் புதுப்புது கடவுளை கண்டுபிடித்து ஊர் விட்டு, ஊர் சென்று கடவுளை வணங்குவதற்கு காரணம். சிறுவயதில் இருந்து வாணங்கி வந்த கடவுளையும், குலதெய்வத்தையும், முழுமையாக இவர்கள் நம்பியிருந்தால் ஏன் புது தெய்வத்தையும், புது மதத்தையும் தேடி செல்ல வேண்டும்.?
இவர்களுக்கு கடவுள் இருக்கு என்ற நம்பிக்கை உள்ளதே தவிர எந்த கடவுள் மீதும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இது ஒரு மனநோய். இவர்களை குறிவைத்து தான் ஆன்மீக கயவர்கள் புதிது, புதிதாக கடவுளை உருவாக்கி ஏழையின் உழைப்பையும், பொருளையும், அபகரிக்கின்றார்கள், பாவம் அப்பாவி மக்கள். இவர்களை மூடநம்பிக்கை என்ற போதையில் இருந்து மீட்டு எடுப்பது இந்த சமுதாயத்தின் கடமை.