ஆன்மீகம் ஓர் தொழில். மக்களுக்கு கெடுதல் என்று தெரிந்தும் அரசு லாபத்திற்காக சாராய கடையை நடத்துவது போல், கடவுளை பற்றிய அறிவை மக்களுக்கு ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் கொடுக்காமல் ஆன்மீகத்தை ஒரு தொழிலாக செய்துவருகின்றார்கள். விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆன்மீக தொழிலில்தான் அதிகமானோர் சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் பலர் பயன்பெறுகின்றார்கள், ஆன்மீகம் ஓர் தொழில் என்பதால் அவர்களுடைய வாடிக்கையாளர்களை இழக்க கூடாது என்பதற்கு மக்களிடம் மூடநம்பிக்கையையும், மதப்பிரிவினையையும் ஏற்படுத்துகின்றார்கள்.என்னுடைய ஆய்வும் ஊடகத்தால் மறைக்கப்படுகின்றது. மது பிரியர்களை போதையின் பிடியில் இருந்து மீட்பது எப்படி கடினமானதோ அதுபோல் மக்களிடம் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினமானதே பொறியியல் படுத்த ஒருவருக்கே தொடர்வினை என்றால் என்ன என்று தெரியாத போது மக்களுக்கு எப்படி புரியவைப்பது,அறிவு இல்லாமல் அறிவை புரிந்துகொள்ள முடியாது.