ஜனநாயகத்தில் சிறுபான்மையினரை எதிர்த்து பெரும்பான்மையினர் ஒன்று திரண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்,பெரும்பான்மையினரை எதிர்த்து சிறுபான்மையினர் ஒருபோதும் ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியாது.
பிஜேபி யின் வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை இஸ்லாமியரை எதிர்த்து இந்துக்களை ஒரு அணியில் திரட்டியதுதான்.
திராவிட கட்சியின் வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை பிராமணர்களை எதிர்த்து மற்ற சாதியினரை ஒரு அணியில் திரட்டியதுதான்.
திராவிட கட்சிகளின் மொழி போராட்டம் வெற்றி பெறாமல் போனதற்கு இந்தி பேசும் பெரும்பான்மையினரை தமிழ் பேசும் சிறுபான்மையினர் ஜனநாயகத்தால் வெல்ல முடியாததே காரணம்.
இந்தியை எதிர்த்து இந்திக்கு நிகரான உரிமையை நம் தமிழ் மொழியும் பெற வேண்டும் என்றால் இந்தியை தாய் மொழியாக அல்லாத அனைத்து மாநில மக்களையும் ஒன்று திரட்டி போராடினால் மட்டுமே ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியும்.
அரசியல் சுயநலனுக்காக மக்களிடம் மொழி உணர்வை தூண்டி சிவா திலிபனை போல் அப்பாவி தொண்டர்களை சாகடிப்பது நல்ல தலைமை பண்பல்ல,மக்களுக்கு மொழியின் உணர்வை கொடுக்காமல் மொழியின் முக்கியத்துவத்தைப் பற்றிய அறிவை கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்”என்ற புத்தகத்தை 13 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி இருக்கின்றேன் இந்த புத்தகத்தை மே 17 இயக்கத்தினர் படித்து போராட்டத்தை அறிவார்ந்த திசையில் கொண்டு செல்ல வாழ்த்துக்கள்.