திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.வடிவேலு அவர்கள் நடித்த ஒரு திரைப்பட காட்சியில், ஏரியிலிருந்து ஒருவர் வெளியே வந்து வடிவேலு இடம் யாரிடமும் சொல்லிடாதீங்க என்று சொல்லிவிட்டு ஏரியில் மறைந்து கொள்வார், எதடா சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போற என்று வடிவேலு கேட்பார் அதற்கு மீண்டும் சொல்லிடாதீங்க என்று சொல்லி ஏரியில் மறைந்து கொள்வான், போலீஸ் வடிவேலிடம் என்னடா சொல்லிவிட்டு போனான் என்று கேட்பார்கள், அதற்கு வடிவேலு சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போனான் சார் என்று சொல்வது அனைவரும் ரசிக்கக்கூடிய நகைச்சுவையாக இருக்கும்.
அது போல் சனாதனம் என்றால் என்ன என்று சனாதன பாதுகாவலர்களிடம் கேட்டால் அழியாதது, மாறாதது, நிலையானது என்று சொல்கின்றார்கள்.
அழியாதது, மாறாதது, நிலையானது என்று இந்த உலகில் எதுவுமே இல்லை, மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இயற்கையின் விதி.
விவாதத்திற்கு சரி என்று ஏற்றுக்கொண்டு சனாதனம் என்று சொல்லக்கூடிய அழியாத, மாறாத, நிலையானது என்ன என்று கேட்டால் அதுதான் சனாதனம் என்று சொல்கின்றார்கள்.
சனாதனம் என்றால் என்ன, சனாதனம் என்ன சொல்கின்றது என்று கேட்டால் “யாருகேட்டாலும் சொல்லிடாதீங்கன்னு “ஏரியில் போலீசுக்கு பயந்து மறைந்து கொண்டவனை போல், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பயந்து இந்து மதத்திற்குள் மறைந்து கொள்கின்றார்கள் சனாதனவாதிகள்.