கரூர் சம்பவம் ஒருபுறம் வேதனையாக இருந்தாலும் மறுபுறம் மிகப் பெரும் தலை குனிவாக உள்ளது, வடநாட்டில் ஆன்மிகம் என்ற பெயரில் கூட்ட நெரிசலில் பலர் இறந்த சம்பவங்களை கேலி செய்த நாம் இன்று நம் மாநிலத்தில் அதைவிட கேவலமாக ஒரு நடிகனை பார்க்கச் சென்று விட்டில் பூச்சை போல் 39க்கும் மேல் உயிரை இழந்து இருக்கின்றார்கள் என்றால் நாம் எந்த அளவுக்கு அரசியல் அறிவு இல்லாமல் இருக்கின்றோம் என்பதற்கு இது ஒன்றே போதும்.
இரண்டு நாட்களுக்கு முன் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் முகநூலில் ஒரு பதிவு போட்டு இருந்தார், அதில் விஜயகாந்த் படத்தை போட்டு “துளசி வாசம் மாறினாலும் என் வாக்கு மாறாது “என்று இதை பார்த்து நான் மிகவும் வேதனைப்பட்டேன், இப்படிப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு என்னத்த சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று. அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும், அரசியல் சூழல் மாறிக்கொண்டே இருக்கும் என்பது சாதாரண மனிதனுக்கும் தெரியும் இந்த நிலையில் விஜயகாந்த் இறந்துவிட்டாலும் தொடர்ந்து என்னுடைய வாக்கு விஜயகாந்த்துக்குதான் என்பது கரூர் சம்பவத்தோடு தொடர்புடையதாக எனக்கு இன்று தெரிகின்றது, நம் தமிழ்நாட்டில் படித்தவன், படிக்காதவன் என்று வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலானவர்களுக்கு அரசியல் அறிவே இல்லை.
ஒருவருக்கு அரசியல் புரிதல் இல்லை என்றால் அது அவருக்கு மட்டும் பாதிப்பு அல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கே பாதிப்பு, எனவே அரசியல் பற்றிய புரிதலுக்கு நான் எழுதிய “என் பார்வையில் அரசியல் “என்ற புத்தகத்தை படித்து பயன்பெறுங்கள்.