அறிவை பெருவதற்கான கட்டுரை மட்டுமல்ல இது,பாதிக்கப்படவர்கள் உரிமையைப் பெறுவதற்கான புரட்சி கட்டுரை இது.
விதி என்பது அறிவியல் உண்மை,
நம்முடைய செயலுக்கு விதிதான் காரணம். நம்முடைய சிந்தனை நமக்கு கட்டுப்பட்டு இல்லை, இறந்த காலத்தின் தொடர்போடு தான் உள்ளது.
எதை ஒன்றையும் சுயமா சிந்திக்க முடியாது. அமர்ந்திருக்கின்ற நாம் அங்கிருந்து எழுந்திருக்க வேண்டும் என்றாலும் இறந்த காலத்தின் தொடர்போடு அல்லது வெளி உலக தொடர்போடு தான் எழுந்திருக்க முடியும். இறந்த காலத்தின் தொடர்பு இல்லாமல் யார் ஒருவராலும் சுயமாக சிந்திக்க முடியாது.மகானாக இருந்தாலும் சரி, மிகப் பெரிய சிந்தனையாளராக இருந்தாலும் சரி, யாரும் சுயமாக சிந்திக்க முடியாது. முடியும் என்று இந்த உலகில் யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருகிறேன்.
நம் சிந்தனையே நம் கட்டுப்பாட்டில் இல்லை என்ற நிலையில், நம் சிந்தனையின் அடிப்படையில் நாம் செய்கின்ற செயல் நமக்கு எப்படி கட்டுப்பட்டதாக இருக்கும். இது புரிந்தால் தொடர்ந்து படியுங்கள் புரியவில்லை என்றால் படித்துப் பயனில்லை.
ஒருவனுடைய செயலுக்கு அவன் காரணமல்ல என்பது உறுதியாகிவிட்டதால் தூக்குத் தண்டனை என்பது அறிவற்ற நீதி. உயர்ந்தவன், தாழ்ந்தவன், என்பதும் அறிவற்ற செயல்.
விதிதான அனைத்தையும் இயக்குகின்றது என்பது அறிவியல் உண்மை என்பதால் விவேகானந்தரின் 'அனைத்திற்கும் நீதான் காரணம்,''அனைத்து சக்தியும் உன்னுள்ளேயே உள்ளது' என்ற கருத்து பொய்யாகிவிட்டது.
எனவே புதிய நீதியை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.
உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், உயர் சாதியினருக்கும், புதிய நீதி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் மூலம் இந்த அறிவு புரட்சியை மக்களிடம் ஏற்படுத்தி விதியால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உள்ள தாழ்ந்த ஜாதியினர்,குற்றவாளிகள், தூக்குத் தண்டனை கைதிகள், ஏழைகள், சமுதாயத்தால் கெடுக்கப்பட்ட பெண்களுக்கும், புதிய நீதியை உருவாக்குவது சாத்தியம் இல்லை.
அரசியல் கட்சி ஆரம்பிக்க புதிய கொள்கை கிடைக்காமல் தவிக்கும் தலைவர்களுக்கும், பழைய கொள்கையில் தடுமாறும் தலைவர்களுக்கும் இது ஒரு வாய்ப்பு. விதி என்பது அறிவியல் உண்மை என்பதை சட்டமாக்கி புதிய நிதியை உருவாக்கி விதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வும், சமத்துவமும், கிடைக்க பாடுபடுவோம் என்று கொள்கையை அமைத்தால் அவர்தான் அடுத்த முதல் மந்திரி என்பது உறுதி.