ஒரு தனி மனிதரை மையமாக வைத்து பலர் பின் தொடர்வது கிளர்ச்சி, சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ( centrifugal force).
வெற்றிடத்தை மையமாக வைத்து கொள்கையின் உந்துதலால் பலர் ஒன்றாக இனைவது புரட்சி, புயல் ஒரு வெற்றிடத்தை மையமாக வைத்து உருவாவது போல் ( tornado force).
ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிடத்தை மையமாக வைத்து, தலைமை இல்லாமல் கொள்கையால் இணைந்த போராட்ட இயக்கம் அதனால் தான் புயலைப்போல் அதன் வேலை முடிந்ததும் தானாகவே வலுவிழந்து விட்டது இது தான் இயற்கை. தலைமை இல்லாமல் மொழி சுதந்திரம் என்ற ஒன்றை மையமாக வைத்து தென் இந்தியர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஒன்று சேர்ந்து தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்! உன்னை அடிமை படுத்துபவன் மீது ரெளத்திரம் கொள் வெற்றி நிச்சயம்!