நம் நாட்டில் வாக்குரிமை உள்ளவர்கள் 20 % சதவிகிதத்தினர் மட்டும்தான், மீதமுள்ள 80 %சதவிகிதத்தினர் வாக்குரிமை இருந்தும், இல்லாதவர்களே.
ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி இருக்கின்றது என்று சொல்கின்றார்களே !அதன் உள் பொருள் அந்த வங்கியில் உள்ளவர்கள் அவர்களுடைய வாக்குரிமையை அடகு வைத்துள்ளார்கள் என்று பொருள்.
அவர்களின் கட்சிகள் தொடர்ந்து தவறுகளை செய்தாலும், இவர்களும் தொடர்ந்து அதற்கேதான் அவர்களின் வாக்கை போடுவார்கள் என்பது உறுதி.
வாக்குரிமையை இழந்து நிற்கும் கட்சி உறுப்பினர்களே, பொறுப்பாளர்களே, சிந்தியுங்கள் !உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள் !அப்போதுதான் நாட்டில் நல்லாட்சி மலரும்.