தேர்தல் முறை மாறவேண்டும்!! இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் 20% வாக்கை பெற்று மொத்த வாக்கில் அதிகம் பெற்ற கட்சி தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று சட்டம் இயற்றப்பட்டால் தான், ஒவ்வொரு மாநில கட்சிகளின் ஆதரவும் மத்திய அரசுக்கு தேவைப்படும், அப்போது வட இந்தியர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என்ற நிலை மாறி தென் மாநிலத்தவரும் இந்தியர் தான் என்ற நிலை உருவாகும். ஓவ்வொரு மாநில மொழிக்கும் தேசிய மொழி அங்கீகாரம் கிடைக்கும்.அனைத்து மத உரிமைகளும் பாதுகாக்கப்படும். மத அரசியல் ஒழியும், மத நல்லினக்கம் ஏற்படும், அனைத்து சமுதாய மக்களும் முழுமையான ஜனநாயகத்தை அனுபவிப்பார்கள், BJP யின் பிரிவினை அரசியல் சூழ்ச்சி தோற்றுவிடும் சிறுபான்மையினர் குரலும் நாடாளுமன்றத்தில் ஒளிக்கும், புதிய இந்தியா உருவாகும். மாநில மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு, மாநில நலனுக்காக கொண்டுவரும் சட்டதிருத்தங்களை மத்திய அரசு ஏற்று கொள்ளும் சூழல் உருவாகும். ஜல்லிக்கட்டு, NEET யை போல் மாநில அரசு சட்டம் இயற்றியும், மத்தியில் ஆளும் வட இந்தியனிடம் நாம் கைகட்டி நிற்கவேண்டிய அவசியம் இருக்காது. எனவே முழுமையான, உண்மையான ஜனநாயகம் மலர, புதிய தேர்தல் முறையை உருவாக்குவோம்! இந்திய மக்கள் அனைவரையும் சென்றடையும் வண்ணம், அனைத்து மொழியிலும் பகிருங்கள்.