தேர்தல் இடஒதுக்கீட்டால் மக்களிடம் சமத்துவம் மலருமா?
11 October 2020by
Vijayakumaran
தேர்தலில் இடஒதுக்கீடு என்பது ஜனநாயக படுகொலை, கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது சமுதாய நீதி, தனிமனித உரிமை என்ற என்னுடைய ஆய்வுக்கட்டுரையை பல ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் அது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அதற்கு காரணம் தனக்கு எது நல்லதோ அது தான் சரியானது என்ற சிந்தனை நம்மில் பலரிடம் இருப்பதும், புதிய கருத்தை வெளிப்படுத்த அஞ்சுவதுவுமே,எல்லோரையும் போல் மலை உச்சியில் கடவுள் தெரிகிறார் என்று சொல்லி விட்டால் பிரச்சனை இல்லை. கடவுள் தெரியவில்லை என்று சொல்லி விட்டால் அவன் இந்த சமுதாயத்தில் பாவியாக பார்க்க படுவான் என்பதை போல், என்னுடைய எழுத்தை புரிந்த வரும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தாதற்கு காரணம்.
வாக்காளர்களின் உரிமையைப் பறித்து, ஜனநாயகப் படுகொலை செய்து, வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் சட்டத்தை இயற்றும் தகுதி இல்லாத எம்எல்ஏ, எம்பி கலால் ஏற்றப்பட்ட சட்டத்தால் பதவிக்கு வந்த பட்டியலின பெண்ணுக்கு சமத்துவம் இல்லை என்று போராடுவது அறியாமையின் உச்சம், முட்டாள்தனம்.
எரியும் நெருப்பை அணைக்காமல் பொங்கும் பானையை மூடுவதால் பயனில்லை மாறாக அது விபரீதத்தைதான் ஏற்படுத்தும். அந்த விபரீதம் தான் பட்டியல் இன பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஏற்பட்ட கொடுமை.
பிரிவினையை மூலதனமாக வைத்து மக்களிடம் ஜாதி, மத வேற்றுமையை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகளாலோ,அரசியல் தலைவர்களாலோ,அல்லது சட்டத்தாலோ மக்களிடம் ஒருபோதும் சமத்துவம் ஏற்படாது. பெரியாரை போன்று அரசியல் சார்புஇல்லா சமுதாயத் தலைவர்களால் மட்டுமே மக்கள் மனதில் சமத்துவம் என்ற விதையை விதைக்க முடியும்.
சமுதாயத் தலைவர்கள் வானிலிருந்து யாரும் குதிக்கவில்லை நம் அனைவருக்குள்ளும் இருக்கின்றார்கள் அவர்களை தட்டி எழுப்பவே இந்த கட்டுரை.