தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு சரியா?
18 September 2023by
Vijayakumaran
அறிவு இல்லாமல் அறிவை புரிந்துகொள்ள முடியாது!
அனுபவம் இல்லாமல் அறிவை பெறமுடியாது!
அனுபவம் இல்லாத படிப்பு அறிவை கொடுக்காது!
ஆணும், பெண்ணும் அறிவாலும் உணர்வாலும் வேறுபட்டவர்கள்! ஆண்களால் புரிந்துக்கொள்ள கூடிய அனைத்தையும், பெண்களால் புரிந்துகொள்ள முடியாது! பெண்களால் புரிந்துக்கொள்ள கூடிய அனைத்தையும் ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது!காரணம் ஆணுடைய அறிவும், பெண்னுடைய அறிவும் வேறு வேறு!
இது என்னுடைய ஆய்வின் முடிவு. இது அறிவியல் உண்மை. இதை புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் புரியவில்லை என்றால் நம்புங்கள்.
தேர்தலில் பின் தங்கிய சமுதாயத்திற்க்கும், பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது என்பது அறிவற்ற செயல்.
பேருந்தில் பெண்களுக்கு தனி இருக்கையை ஒதுக்குவது போல் தேர்தலில் இட ஒதுக்கீடு செய்யக்கூடாது. காரணம் பயனிப்பது என்பது ஒருவர் உரிமை, யார் என்னை ஆளவேண்டும் என்று தேர்ந்து எடுப்பது ஓட்டு போடுபவரின் தனி மனித உரிமை,அந்த உரிமையை அரசியல் சட்டம் பறிக்ககூடாது.
பேருந்தில் பெண்களுக்கு இருக்கை ஒதுக்குவது போல் இட ஒதுக்கீடு அடிப்படையில் பேருந்துக்கு பெண் ஓட்டுனர்களை பணியில் நியமித்தால், அந்த பேருந்தில் நடத்துனர் கூட உயிரை பனைய வைத்து பயனிக்க மாட்டார். அது போல் தகுதி இல்லாதவர் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி இந்த நாட்டை ஐந்து ஆண்டுகள் வழி நடத்தினால் நாடு எப்படி முன்னேறும்.
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை இருப்பதுப்போல் தேர்தலில் போட்டியிட சம உரிமை பெண்களுக்கு இருப்பதில் தவறு இல்லை. திறமை உள்ளவர்கள் தான் தலைமை ஏற்க்கவேண்டும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பெண்களுக்கான ஒதுக்கீட்டால் முதல்வர் ஆகவில்லை, பொது தலத்தில் போட்டியிட்டுதான் முதல்வர் ஆனார். நம் சமுதாயம் ஆண்,பெண் வேற்றுமை பார்க்கவில்லை என்பதர்க்கு இதுவே சான்று.
ஆண் செய்கின்ற வேலையை பெண்ணும், பெண் செய்கின்ற வேலையை ஆணும் செய்யமுடியாது என்பது அறிவு உள்ள அனைவருக்கும் புரியும். இந்த குறைந்தப்பட்ச அறிவுகூட இல்லாமல் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து இருப்பது வியப்பாக இருக்கின்றது. நீதி மன்றத்தில் இதற்க்கு யாரேனும் தடைவாங்குவதர்க்கு முயற்ச்சித்தால் என்னுடைய ஆய்வு புத்தகத்தை தருகின்றேன்.
நீதி மன்றத்தை விட மக்கள் மன்றமே உயர்ந்தது. எனவே இந்த விழிப்புணர்வை ஆண்,பெண் வேற்றுமை பார்க்காமல் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள். பதவி என்பது தனிமனிதனை அலங்கரிப்பதர்க்காக அல்ல. பதவிக்கு வருபவர்கள் திரம்பட பணிபுரிந்து நாட்டை உயர்த்த வேண்டும், அது ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம் இதற்க்கு இட ஒதுக்கீடு தடையாக இருக்க கூடாது.