தேர்தல் கருத்துகனிப்பு ஊடகங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம்
9 May 2016by
Vijayakumaran
நான் எழுதிய ஏழாவது அறிவு என்ற ஆய்வு புத்தகத்தின்படி ஒரு மனிதன் எதை பார்கின்றானொ, எதை கேட்கின்றானோ அது அவனை அவன் அனுமதி இல்லாமலேயே ஆள ஆரம்பித்து விடும் என்பது விதி.அதன்படி ஊடகங்களின் தேர்தல் கருத்துகணிப்பு ஒருவரை ஆள ஆரம்பித்து விடுகின்றது,அதனால் அவன் ஓட்டு போடவிரும்பியவருக்கு போடாமல், வேறு ஒருவருக்கு ஓட்டு போடும் நிலையை ஊடகம் உறுவாக்குகின்றது என்பது உண்மை. இந்த தேர்தளை பொருத்தவரை யார் முதல்வராக வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள் மக்கள். அதன்படி ஒருவர் ADMK க்கு ஓட்டு போடவிரும்பாமல் PMKக்கு ஓட்டு போட விரும்பியிருக்கின்றார் என்று வைத்துகொள்வோம்,இந்த சூழலில் கருத்து கனிப்பின்படி அந்த தொகுதியில் ADMK வெற்றி பெரும், DMK இறண்டாவது இடத்திற்கும், PMK மூன்றாவது இடத்திற்கும் வரும் என்று ஊடகங்கள் செய்தியை பறப்பினால், அவன் என்ன நினைப்பான் என்று உங்களுகே தெறியும், மூன்றாவது வரபோகின்ற PMKக்கு நம்முடைய ஓட்டை போடுவதால் எந்த பயனும் இல்லை அதே சமயம் நான் PMKக்கு ஓட்டு போடுவதால் ADMK வெற்றி பெற்றுவிடும், எனவே இறண்டாவது இடத்தில் உள்ள DMKக்கு ஓட்டு போட்டு ADMK வராமல் தடுக்கவேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு வரும் என்பது இயல்பான ஒன்று தான். இது போல் நாட்டில் உள்ள 50% மக்களை இந்த கருத்து கனிப்பு மாற்றுகின்றது. இதை ஊடகங்கள் மறுக்க முடியுமா?..எனவே தேர்தல் கருத்து கனிபை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்.