Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    தேர்தல் 2026

  • All Blogs
  • Politics
  • தேர்தல் 2026
  • 5 May 2026 by
    Vijayakumaran
    சீமான் முள் புதர்களை அகற்றி சாலை அமைத்துக் கொடுத்தார், விஜய் அதில் எளிதில் பயணம் செய்து கோட்டைக்கு சென்று விட்டார். சீமான் திராவிடம் மற்றும் தேசிய கட்சிகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்றால் விஜய் வெற்றி பெற்றிருக்க முடியாது.
    மக்கள் சீமானின் கொள்கையை ஏற்றுக் கொண்டார்களே தவிர சீமானை நம்பவில்லை, சீமான் தேர்தலில் தோற்றுவிட்டாலும் அவருடைய திராவிட ஒழிப்பு கொள்கை வெற்றி பெற்றுவிட்டது. கொள்கை வெற்றி பெற்றால் கொள்கைவாதியும் வெற்றி பெற்றதாக தான் பொருள்.

    விஜய் திரைப்படத்தில் வரும் கதாநாயகன் போல் நிஜ வாழ்க்கையிலும் நேர்மையாக இருப்பார் என்று மக்கள் நம்பி விட்டார்கள் எனவே விஜய் நிஜ வாழ்க்கையில் இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் ஆனால் இனி அவர் மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக செயல்பட வேண்டும். ஆட்சியில் நேர்மையையும், வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் கடைபிடித்து மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து மக்களை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும், மாநில உரிமைகளையும் மொழி உரிமையையும் ஒன்றிய அரசிடம் சமரசம் இல்லாமல் துணிந்து நின்று போராடி பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம், வாழ்த்துக்கள் ..

    in Politics
    # அரசியல் சமூகசீர்திருத்தம் தமிழகஅரசு தமிழ்நாடு தலைமைத்துவம் திராவிடஅரசியல் தேர்தல்
    கடந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் மாற்ற முடியுமா?
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us