மத்தியில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தால் மட்டும் தான் நாடு முழுவதும் அதிகார பகிர்வு சீராக இருக்கும்,
மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும்,
அனைத்து மாநிலத்திற்கும் நிதி பகிர்வு சீராக இருக்கும்,
அனைத்து மாநில மொழிகளுக்கும் இந்திக்கு நிகரான அங்கீகாரம் கிடைக்கும், எனவே மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தாலும் சரி அல்லது பிஜேபி தலைமையில் மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைந்தாலும் சரி, கூட்டாட்சி மட்டுமே தென் மாநிலங்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும்.
மத்தியில் கூட்டாட்சி அமைய வேண்டும் என்றால் தென் மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் மட்டுமே வெற்றி பெற வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக் கூடாது.
மத்தியில் பிஜேபி கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டதால் இனியும் பிஜேபி இடம் எதிர்பார்ப்பதற்கு எதுவும் இல்லாததால் புதியதாக காங்கிரஸ் தலைமையில் கூட்டாட்சி அமைத்து ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்றால் அனைத்து மாநிலம் மற்றும் மத உரிமைகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.