தனிமனித உரிமை, சமத்துவம், நட்பு இந்த மூன்றுக்கும்வேறுபாடு தெரியாத அரசு சமத்துவத்துக்கான விருதை எழுத்தாளர்களுக்கு கொடுப்பது வேடிக்கையாக உள்ளது.
அனைத்து மாநில மொழியும் தேசிய மொழி என்றால் அது சமத்துவம்..
ஒருவர் அவர் வீட்டுக்குள் யாரை அனுமதிப்பது என்பதை தீர்மானிப்பது தனிமனித உரிமை..
சாதி, மதம், பாராமல் பழகுவது நட்பு, அதன் பெயர் சமத்துவம் அல்ல...
நாம் வளர்க்கும் நாய் நம்முடைய படுக்கையரைவரையில் அனுமதிப்பதன் பெயர் சமத்துவம் அல்ல, அது நட்பு!
கோவிலில் பணக்காரனுக்கு தனிவழி இருப்பது சமத்துவம் அல்ல,அது ஏழை, பணக்காரன் வேறுபாடு..
தேர்தலின் போது வரிசையில் நின்று ஓட்டு போடுவது சமத்துவம், இங்கு உள்ள சமத்துவம் ஏன் கோவிலில் இல்லை??
இரு சாதியினரிடம் உள்ள நட்பை இது தான் சமத்துவம் என்று சொல்வது,ஏழைகள் உண்மையான சமத்துவத்தை கேட்கும் அறிவை பெற கூடாது என்பது தான் ஆளும்வர்க்கதின் சூழ்ச்சி..
அரசு அலுவலகத்தில் அனுபவம் மிக்கவரை புறம் தள்ளிவிட்டு அனுபவம்குறைந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர்க்கு பதவி உயர்வு கொடுப்பது சமத்துவம் அல்ல, இது சாதி அரசியலின் உச்சம்!
நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்தாமல் சாதி அரசியல், மொழி அரசியல், மத அரசியல் செய்கின்ற மத்திய அரசு, சமத்துவத்தை பற்றி பேசுவது மக்களை ஏமாற்றும் செயல்.
காதலுக்கான இலக்கனத்தை ஒழுக்கம் இல்லாதவன் மாற்றியது போல்,
சமத்துவத்தின் இலக்கனத்தை அரசியல்வாதி மாற்றிவிட்டான்!!..