இந்தியா பல நாடுகளின் கூட்டமைப்பு,ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தாய்மொழிகள் உள்ளன, அதனால் தான் இந்தியாவுக்கு என்று எந்த மொழியும் தேசிய மொழியாக இல்லை. இந்தி தேசிய மொழிஅல்ல.இந்தியா ஒரு கூட்டமைப்பு நாடு என்பதால், எந்த ஒரு மாநில மொழியும், கலாச்சாரமும், மற்றொரு மாநிலத்தி ன்மீது திணிக்கக் கூடாது என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆன அடிப்படை உரிமை.மீறினால் ஐநா தலையிடுவதற்கு உரிமை உள்ளது இதைப் பொருட்படுத்தாத வட இந்தியர்கள் அவர்களிடம் பெரும்பான்மை எம்பிக்கள் இருப்பதால், ஜனநாயகத்தை மதிக்காமல் அவர்கள் விருப்பப்படி பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றி மறைமுகமாக தென்னிந்தியர்களை மொழியாலும், கலாச்சாரத்தாலும், பொருளாதாரத்தாலும்,அடிமைப்படுத்தி வருகின்றார்கள்.
சமஸ்கிருதம் எந்த ஒரு மாநில மொழியும் அல்ல, அது நாடோடி பிராமணர்களின் மொழி, நாடோடிகளாக வந்த பிராமணர்கள் மதத்தாலும், ஜாதியாலும் மக்களைப் பிரித்து இன்று இந்தியாவின் ஆட்சியையே பிஜேபி என்ற மதவாத கட்சியை பயன்படுத்தி பிடித்துவிட்டார்கள், பிஜேபி பிராமணர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் ஆட்சி என்பதால் அனைத்து மாநிலத்தின் மீதம் சமஸ்கிருதத்தை திணிக்கின்றார்கள். இதை அனைத்து தென்னிந்தியர்களும் புரிந்து கொண்டு மாநில அரசியல் கட்சிகளுக்குல் மொழிப் போராட்டத்தில் மாறுபட்ட கருத்து இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே நாம் இழந்த மொழி உரிமையை மீண்டும் பெறமுடியும்.
நம்முடைய இலக்கு இந்தியை எதிர்ப்பது மட்டுமல்ல இந்திக்கு இணையாக அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழி அங்கீகாரம் பெற வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்.
உலகம் நம் இளைஞர்கள் கையில் உள்ளதால், இனியும் வட இந்தியர்களை நம்பாமல், தகவல் தொழில்நுட்பம் மூலம் உலக நாடுகளின் கவனத்தை நம் உரிமைப்போராட்டம் பெற்றால் மட்டுமே வெற்றி சாத்தியம்.
வாழ்க அனைத்து மாநில மொழிகளும் ! !
வாழ்க கூட்டாட்சி இந்தியா !!