முட்டை, கோழியிலிருந்து வந்ததா? அல்லது கோழி,முட்டையிலிருந்து வந்ததா? என்ற கேள்வியும், ஹிந்தி படிப்பதால் நல்லதா?கெட்டதா? என்ற கேள்வியும்,அறிவாளிகள் என்று தன்னை நினைத்து கொள்பவர்கள், மற்றவர்களை முட்டாளாக்க கேட்கும் கேள்வியாகவே இதுவரை உள்ளது...
முட்டை எங்கிருந்து வந்தது என்று கேட்டல்தான், பரினாம வளர்ச்சியால் முட்டை வந்தது என்று சரியான பதிலை சொல்லலாம், இரண்டில் ஒன்றை தான் சொல்ல வேண்டும் என்று தவறான கேள்வியை கேட்டால் சரியான பதில் எப்படி கிடைக்கும்?...
அதுபோல் இந்தியாவில் 22 மாநில மொழிகள் இருக்கும் போது ஒரு மாநில மொழி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கலாமா என்ற கேள்வியை கேட்டால் தவறு என்று அனைத்து மக்களும் கூறுவார்கள்.
இந்த நிலையில் நாட்டுமக்கள் அனைவரின் உணர்வையும், நலனையும், பொருட்படுத்தாமல் சூழ்ச்சியாக ஒரு மாநில மொழியான ஹிந்தியை தேசிய மொழியாக அறிவித்துவிட்டு அதை படித்தால் நல்லதா? கேட்டதா? என்று கேட்பது நம்மை அடிமையாக்கும் முட்டால் தனமான, சூழ்ச்சியான செயல் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு மொழி சுதந்திரத்திற்கு போராடுவோம்!!!!!, வெற்றி பெறுவோம்!!!....