இந்துமத நடைமுறையில் சமத்துவம் மறுக்கப்படுகின்றது என்று குரல் கொடுக்கும் சுயமரியாதை இயக்கமான திக, திமுக தலைவர்கள், இந்த நாட்டின் உயர் பதவியில் உள்ள ஜனாதிபதி, விருது வழங்கும் விழாவில் சமத்துவம் இல்லாமல் விருது வாங்குபவர் ஜனாதிபதியை விட ஒரு படி கீழே இருந்துதான் விருதை வாங்க வேண்டும் என்ற நடைமுறை சுயமரியாதை இயக்கமான திக, திமுக வுக்கு தெரியாதா!
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தகுதி எம்எல்ஏ, எம்பி க்கு இருப்பதால், ஜனாதிபதியின் தவற்றை சுட்டிக்காட்டவும் எம்எல்ஏ, எம்பி க்கு உரிமை உண்டு. எனவே சுயமரியாதை இயக்கமான திமுக, இந்து மதத்தவர் பல்லக்கு தூக்குவதை கண்டித்தது போல் ஜனாதிபதியின் விருது வழங்கும் நடைமுறையையும் கண்டிக்கவேண்டும்.