ஆகஸ்ட் 15, ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள் மட்டுமல்ல இதே நாளில்தான் நாம் இந்தி பேசும் வட இந்தியர்களிடம் மொழி அடிமைகளாக அடிமைப்பட்டு, மொழி அடிமைகள் என்ற புரிதல் இல்லாமல் மூன்று தலைமுறையாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அடிமைகள் நாம்தான்.
புரட்சி என்பது ஆயுதத்தை கையில் எடுப்பது அல்ல, ஒவ்வொருவர் மனதிலும் நாம் மொழி அடிமைகளாக இருக்கின்றோம் என்ற புரிதல் அரும்பினாலே போதும் அதுதான் புரட்சி.
இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் வேண்டும் என்ற நம் உரிமையை பெற ஆயுதம்ஏந்தி போராட வேண்டிய அவசியம் இல்லை,எதுவும் செய்யாமல் சும்மா இருந்தாலே போதும் நம்முடைய உரிமைகள் நமக்கு கிடைத்துவிடும்.
சுதந்திர தினத்தை கொண்டாடக் கூடாது !
சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது !!
சும்மா இருந்தால் போதும் இதுவும் புரட்சிதான்!!!