சாதி, மதம், மொழி, மாநிலம், ஆகியவற்றின் பிரிவினை அரசியலால், கற்காலத்துக்கு சென்றுள்ள இந்திய ஜனநாயகத்தின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை இழந்திருக்கும் இந்த நிலையில், பிரிவினை அரசியலால் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்வதா, அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதா, என்ற வேதனையில் இந்த சுதந்திரத் திருநாளை கடந்து செல்லக்கூடிய கட்டாயத்தில் இந்திய ஜனநாயகம் உள்ளது. இந்த நிலை மாறி சமத்துவமும், சமாதானமும், ஜனநாயகமும்,இந்தியாவில் மலர்ந்திட வாழ்த்துக்கள்.
72 ஆண்டுகளாக வடஇந்தியர்களிடம், தென்இந்தியர்களாகிய நாம் மொழியாலும், பொருளாதாரத்தாலும், அரசியல் அதிகாரத்தாலும், அடிமைப்பட்டு இருக்கின்றோம் என்கின்ற உணர்வும், அறிவும், இல்லாமல் சுதந்திரத்தை கொண்டாடுகின்றோம். நம் மொழி அழிக்கப்படுவதையும், பொருளாதாரம் சுரண்டப்படுவதையும், நாம் எப்போது உணர்வோமோ...
ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றும், வடநாட்டு இந்தி பேசுவோரிடம் இருந்து நமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.. இதை புரிந்துகொள்ளாமல், அடிமைகளாக இருந்துகொண்டே சுதந்திரத்தை கொண்டாடுகின்ற முட்டாள்கள் நம்மை தவிர இந்த உலகில் யாரும் இல்லை!.. சிந்தியுங்கள்! விரைவில் மொழி சுதந்திரம் பெறுவோம்...
சுதந்திர போராட்டத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிய தமிழர்களின் வீரத்தை நினைவுபடுத்தி பெருமைப்படும் நாம், நம் கடமையை செய்யாமல் 75 ஆண்டுகளாக வட இந்திய இந்திமொழி வெறியர்களிடம் மொழி அடிமையாக இருப்பதை உணராமல், முன்னோர் பெருமை பேசும்நாம், அடிமையாக வாழ்கின்றோம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகின்றோமோ. .. அடிமையாக இருந்து கொண்டே சுதந்திரத்தை கொண்டாடும் பகுத்தறிவு சமூகம் நாம்தான்.