திறமையால் தான் வெல்ல முடியும்,
சூழ்ச்சியால் வீழ்த்ததான் முடியும், வெல்லமுடியாது. திறமையால் பெறுகின்ற வெற்றிக்கும் சூழ்ச்சியால் பெறுகின்ற வெற்றிக்கும் வேறுபாடு உண்டு.
திறமை வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும்.
சூழ்ச்சி எதிரிக்கு தோல்வியைக் கொடுக்கும்.
வேகமாக ஓடியதால் வெற்றி பெறுவது என்பது திறமை.
மற்றவர்களை வேகமாக ஒடாமல் செய்து வெற்றி பெறுவது என்பது சூழ்ச்சி.
நாம் ஆன்மிகத்தை துன்பத்தின் வடிகாலாக பார்க்கின்றோம்,ஆனால்
BJPயும்,பிராமணர்களும், வருமானத்திற்கான வழியாகப் பார்க்கின்றார்கள்.அதனால் தான் அவர்கள் ஆன்மீகத்தை அரசியல் ஆக்குகின்றார்கள்.
BJP வடமாநிலத்தில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் சூழ்ச்சியால் பெற்றவையே. தமிழ்நாட்டில் சூழ்ச்சிக்கு நாம் இடம் கொடுக்காமல், தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மாநில உரிமைகள் காக்கப்படும்..ஆன்மீகம் நமது நம்பிக்கை, அரசியல் நமது உரிமை,நம்பிக்கை எப்போதும் ஆய்வுக்கு உட்பட்டது, உண்மையை விவாதிப்பது பகுத்தறிவு.நம்பிக்கை நம் அரசியல் உரிமையை பரித்துவிடக்கூடாது.நாம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக சூழ்ச்சியை வென்று ஒற்றுமையாக இருந்துக்காட்டுவோம்.