Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    சீமானின் சேவை நாட்டுக்கு தேவை !!!

  • All Blogs
  • Politics
  • சீமானின் சேவை நாட்டுக்கு தேவை !!!
  • 23 November 2025 by
    Vijayakumaran
    சாதி, மதம், மொழி ஆகிய வேற்றுமையில் இருந்து விடுபட்டு மாநில உரிமை என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்கான அரசியல் விழிப்புணர்வு கட்டுரைதான் இது.

    வாழ்க்கைக்கு பொருளாதாரமே ஆதாரம், ஒன்றிய அரசுக்கு நாம் கட்டும் வரி மீண்டும் மாநில நலனுக்காக வருகின்றதா என்றால் இல்லை, வரி என்ற பெயரில் நம் பொருளாதாரத்தை சுரண்டி தான் வடக்கில் வாழ்கின்றார்கள்.கண்ணுக்குத் தெரியாமல் நம் மக்களின் உழைப்பு வடக்கர்களால் சுரண்டப்படுகின்றது, நம் வரி பணத்தை செலவு செய்துதான் இந்தியை,சமஸ்கிருதத்தை வளர்க்கின்றார்கள் நம் மீது திணிக்கின்றார்கள்.ஆனால் நம் மாநில மொழிக்கு போதிய நிதி ஒதுக்குவது இல்லை.

    நம் மாநில பொருளாதார உரிமையை, மொழியுரிமையை, ஆட்சி உரிமையை பெற மாநில கட்சிகள் மாநிலத்தை ஆட்சி செய்தால் மட்டுமே சாத்தியம். நம்முடைய ஜனநாயக உரிமையை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் நம் உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க முடியும்.

    நம் மாநில கட்சிகளுக்கு இடையில் பல கொள்கை முரண் இருக்கலாம் தவறு இல்லை, ஒரு குடும்பத்துக்குள் யாரிடம் நிர்வாகத்தை கொடுப்பது என்பதில் கருத்து முரண்  இருப்பதுபோல், குடும்ப சண்டையில் பக்கத்து வீட்டுக்காரன் இடம் நம் குடும்ப நிர்வாகத்தை கொடுப்பது எப்படி முட்டாள்தனமோ அது போல் தான் நம் மாநில கட்சிகளுக்கு வாக்களிக்காமல் வட மாநிலக் கட்சிகளான காங்கிரஸ், பி ஜே பிக்கு வாக்களிப்பது.
    நம்ம வீட்டு பிரச்சனையை நாமே தீர்த்துக் கொள்ளாமல் பக்கத்து வீட்டுக்காரனை துணைக்கு கூட்டி வருவது போல் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக - பிஜேபி கூட்டணி. இப்படிப்பட்ட கூட்டணி மாநில நலனுக்கு எதிரானது.

    மாநில உரிமையை தன் கொள்கையாக வைத்துள்ள திமுக, அதிமுக கட்சிகள் வட மாநில கட்சிகளான காங்கிரஸ், பிஜேபியுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது மாநில உரிமைக்கு எதிரானது. யாரிடமிருந்து நம் மாநில உரிமைகளை பெற வேண்டுமோ அவர்களிடமே நம் ஜனநாயக உரிமையை ஏன் கூட்டணிக்காக விட்டுக் கொடுக்க வேண்டும். திமுகவும், அதிமுகவும் மாநில கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்து வெற்றி பெற்றிருந்தால் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தின் நலன் கருதி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிகளுடன் சுமூகமான உறவை வைத்துக் கொள்ள முடியும், இதன் மூலம் மாநிலத்தின் உரிமைகளை பெற முடியும்.

    மாநில உரிமையை மீட்டெடுக்க வரும் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றால் காங்கிரசுக்கு திமுக காரர்கள் வாக்களிக்கக்கூடாது, மாற்றுக் கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும்.அதிமுக - பிஜேபி கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றால் பிஜேபிக்கு அதிமுக காரர்கள் வாக்களிக்கக்கூடாது மாற்றுக்காட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும், அப்போதுதான் நம் மாநில உரிமைகள் வடமாநில கட்சிகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய கொள்கையில் தெளிவாக உள்ளார்.காங்கிரஸையும், பிஜேபி யையும் மாநிலத்தின் எதிரியாக பார்க்கின்றார்.ஆனால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாநில உரிமையை பேசிக்கொண்டே தன் கொள்கைக்கு எதிராக வடமாநில காட்சியான காங்கிரஸ் இடமும், பிஜேபி இடமும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டு அடிமைகளாக இருக்கின்றன.இந்த அடிமைகள் மாநிலத்தின் உரிமையை எப்படி பெற்று கொடுக்க முடியும்?

    மக்கள் அரசியல் புரிதல் இல்லாமல் சீமானை போன்ற மாநில அரசியல் தலைவர்களை இழந்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி சீமானுக்கு இருக்கா என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய சிறந்த எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதி உள்ள தலைவராக சீமானை நான் பார்க்கின்றேன்.

    in Politics
    விட்டில் பூச்சி
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us