அறிவைப் பற்றிய அறிவு ஆயிரத்தில் ஒருவருக்கு கூட இல்லை என்பதால் தான் சனாதன தர்மத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள்.
அறிவைப் பற்றிய புரிதல் மக்களுக்கு வந்து விட்டால் (அழியாத நீதி )சனாதன தர்மம் என்ற ஒன்று இந்த உலகில் எதுவும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
சனாதன தர்மம் (அழியாத நீதி )என்று இந்த உலகில் எதுவுமே இல்லை. ஒரு மனிதனின் அறிவு வளர வளர நீதி மாறிக்கொண்டே தான் இருக்கும், இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சனாதன தர்மமாக இருந்த குலத்தொழில், சாதி பாகுபாடு, உடன்கட்டை ஏறுதல், பெண் அடிமையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் 75 ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டது தெரியாமல், செத்த பாம்பை அடிப்பது போல் செத்த சனாதன தர்மத்தை ஒருவர் அழிப்பேன் என்பதும் மற்றொருவர் அழிக்க விடமாட்டேன் என்பதும் முட்டாள் மக்கள் அறிவைப் பெறக் கூடாது என்பதற்காகவே.