சமூக நீதி என்பது சாதி அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து துறையிலும் இட ஒதுக்கீடு கொடுப்பதுதான். முன்னேறிய சாதியினருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல், அரசியல் லாபத்திற்காக பின்தங்கிய சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்வது சமூகநீதி அல்ல.
சாதியால் குடும்பங்கள் கூடி வாழ்வதும் தவறில்லை, சாதி தீண்டத்தகாத வார்த்தையும் இல்லை.
சாதிக்கு ஒரு நீதி தான் தவறானது, எனவே சமூக நீதியை உருவாக்கிவிட்டால் சாதியை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை.
சாதியை தீண்டத்தகாத வார்த்தையாகவும், சாதியை ஒழிக்க வேண்டும் என்றும் மக்களிடம் தவறான கருத்தை பரப்பியது சமூகநீதிக்கு எதிரான ஓநாய் கூட்டம் தான்.
ஆடு நனைகின்றது என்று ஓநாய் கவலைப்பட்டது போல், சமூக நீதிக்கு எதிராக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே சாதியை ஒழிக்க வேண்டும் என்று மக்களிடம் மூளை சலவை செய்து ஆட்சி அதிகாரத்தை சமூக நீதிக்கு எதிராக கடந்த 50 ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றார்கள்.
சமூக நீதி என்பது கூலி வேலையில் சேர்வதில் மட்டும் அல்ல, இந்த நாட்டை ஆள்வதிலும் வேண்டும் என்பதை எப்போது இந்த அப்பாவி மக்கள் புரிந்து கொள்வார்களோ!
எந்த சாதியாக இருந்தாலும் நம்முடைய சமூகத்திற்கான இடத்தை நாம் கேட்பது தான் சமூக நீதி.
சாதி வன்கொடுமை என்பது சாதிக்கு ஒரு நீதி இருந்ததும், சாதியின் பெயரால் ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தையும் இழிவு படுத்துவது தான். அதன்படி ஜெய் பீம் திரைப்படம் மூலம் சாதியால் ஒரு சமூகத்தை இழிவு படுத்தி இருப்பது என்பது சாதி வன்கொடுமை.இதை இரும்புக்கரம் கொண்டு அடக்கி சாதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் அவர்களை இந்த அரசு பாராட்டுவது என்பது வேதனையாக உள்ளது.
இந்த நிலை மாறவேண்டும் என்றால் ஆட்சி அதிகாரத்திலும் சமூக நீதி வேண்டும் என்பதை சிந்திப்பீர் !....