புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேறிய முதல் மசோதாவே மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரானதாக உள்ளது.தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது வாக்காளர்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது, வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கையை வைப்பதற்கு சமமானது.
“முதல் கோணல் முற்றும் கோணல்“ என்பதை போல் ஆரம்பமே சரியில்லை, இன்னும் எத்தனை ஜனநாயக படுகொலைகளை இந்த புதிய கட்டிடத்தில் செய்ய இருக்கின்றார்களோ !