பெரியாரின் முற்போக்குச் சிந்தனையில் மாறுபட்ட கருத்துக்கள் எனக்கு இருந்தாலும், சமூகப் போராளியாக பெரியார் இருந்ததால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் உடன்படுகிறேன்.
ராமர் படத்தை செருப்பால் அடித்ததன் நோக்கம், இந்து கடவுளை சிறுமைப்படுத்த அல்ல, இந்து கடவுளின் பெயரால் உழைக்கும் இந்து மக்களை அடிமைப்படுத்தி இருந்த உயர் சாதி இந்துக்களுக்கு எதிரான போராட்டம்.
ராமர் படத்தை அன்று பெரியார் செருப்பால் அடிக்க வில்லை என்றால் நாம் இன்று கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் சமத்துவத்தை பெற்றிருக்க மாட்டோம்.
பெரியாரின் நோக்கம் கடவுள் நம்பிக்கை உள்ளவரின் மனதை புண்படுத்துவது அல்ல, கடவுளின் பெயரால், சாதியால் அடிமைப்பட்டிருந்த இந்து மக்களை மீட்டு எடுப்பதுதான் என்பதை தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார், ராமர் படத்தை செருப்பால் அடித்து 50 ஆண்டுகள் கடந்தும் தமிழனால், தமிழ்நாட்டில் தமிழில் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய முடியாத நிலை தொடர்கின்றது என்றால் 50 ஆண்டுகளுக்கு முன் ஆதிக்க சாதியின் ஆளுமை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று இன்றைய இளைஞர்கள் எண்ணி பார்க்க வேண்டும். இன்று நான் எழுதுவதும், நீங்கள் படிப்பதும் பெரியாரின் புரட்சியால் தான்.
பெரியாரின் வழியில் நம்மை அடிமைப்படுத்துபவன் கடவுளாக இருந்தாலும் சரி அதை பெரியார் கற்றுக் கொடுத்தபடி அடித்து விரட்டியடிக்க உறுதி கொள்வோம்.
கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் மீண்டும் அடிமையாகாமல் விழித்துக் கொள்வோம்.