சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்பதால் மனிதனை மனிதன் பல்லக்கில் சுமப்பது தவறு.
எனவே தமிழக அரசு தடை விதித்தது சட்டப்படி சரியே, ஆனால் பல்லக்கு தூக்குவது என்பது தேர் இழுப்பது போல் ஒரு பாரம்பரிய நிகழ்வு என்றால் அரசு அனுமதித்தால் தவறு இல்லை.
சாதியால் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்துவது சட்டத்தின் பார்வையில் வன்கொடுமை என்பதால், பாரம்பரியப்படி உயர்ந்த சாதியினரை தான் தாழ்ந்த சாதியினர் பல்லக்கில் வைத்து சுமந்தார்கள், எனவே பல்லக்கில் இருப்பவர் எந்த சாதியோ அதே சாதியினர்தான் பல்லக்கை தூக்குபவர்கள் என்றும், பல்லக்கு தூக்குபவர்கள் கூலிக்கு தூக்கவில்லை என்பதையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்தால் அரசு தடை செய்ய வேண்டியது இல்லை என்பது என்னுடைய கருத்து.
சமத்துவம் குடியரசுத் தலைவர் விருது வழங்கும் அரங்கிலேயே இல்லை, குடியரசுத் தலைவர் உயர்ந்த நிலையில் இருந்தும் சாதனை படைத்தவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தும் விருதை வாங்குவதை பார்க்கும்பொழுது சமத்துவம் பற்றி பேச எந்த அரசுக்கும் தகுதியில்லை.