நொண்டியை நொண்டி என்று சொல்வதுபோல் ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதில் என்ன தவறு. நொண்டியை போல் ஒன்றிய அரசு மாநிலங்களின் தோள்களில் சவாரி செய்துகொண்டு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று சுமக்கும் மாநிலத்தையே அடிமைப்படுத்த முயற்சிக்கும் போதுதான் ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்று நினைவுபடுத்த வேண்டிய கட்டாயம் மாநிலங்களுக்கு ஏற்படுகின்றது.
சுமப்பவனை அடிமை என்று நொண்டி நினைக்கும் போதுதான் நொண்டிக்கு நொண்டி என்பதை சுமப்பவன் நினைவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது, நொண்டி தன் நிலை உணர்ந்து செயல்பட்டால் நொட்டியை யாரும் நொட்டி என்று சொல்ல மாட்டார்கள்.
ஒன்றிய அரசு என்று சொல்வது, நீ யார் என்று உணர்ந்து செயல்படு என்பதற்கான மாநில அரசுகளில் எச்சரிக்கையே. இதை உணர்ந்து மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடாமல் இருந்தால் மாநிலங்களின் தோல்களில் ஒன்றிய அரசு தொடர்ந்து பயணிக்கலாம், இல்லையென்றால் ?