Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    NLC நீர்பந்தல்

  • All Blogs
  • Politics
  • NLC நீர்பந்தல்
  • 15 April 2017 by
    Vijayakumaran
    மொழி உரிமை விழ்ப்புணர்வு தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனம் தமிழக மக்களுக்காக நீர்பந்தல் அமைத்துள்ளது அந்த பந்தலுக்கான பெயரை தமிழில் வைக்காமல் இந்தி வார்த்தையில் DHARA என்று பெயர் வைத்துள்ளது. தமிழக மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் வட நாட்டு அதிகாரியின் இந்த செயலை நாம் அனைவரும் கண்டிப்போம். இந்த போராட்டம் இந்திக்கு எதிரான போராட்டம் அல்ல, தென் இந்திய மாநில மக்கள் அனைவருக்குமான மாநில மொழி உரிமை போராட்டம். இதில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் தென்மாநில மக்கள் அனைவரும் கலந்துகொண்டு மக்களிடம் மொழி உரிமை விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவோம். இது இந்தி எதிர்ப்பு போராட்டம் அல்ல தாய் மொழி உரிமை போராட்டம். தமிழ் மொழிக்கான உரிமை போராட்டம் அல்ல, தென் இந்திய மொழிகள் அனைத்துக்குமான போராட்டம். அரசியல் தலைவர்களே மொழி பெருமை பேசி மக்களை ஏமாற்றியது போதும், எங்களுக்கு மொழி உரிமையை பெற்று கொடுங்கள். எழுத்தாளர்களே தாய் மொழியை நேசித்தது போதும், மொழி சுதந்திரத்தை பற்றி சிந்தியுங்கள். அனைத்து மாநில மொழிகளும் தெசிய மொழிகளே. ஒரு மாநில மொழி மற்றொரு மாநில மொழியை அடிமை படுத்த கூடாது. சாதியம் என்று எண்ணியதாள்தான் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றோம். சாத்தியம் என்று எண்ணுவோம் மொழி உரிமையை பெருவோம். படித்த அறிவில்லாதவர்களே மொழி சுதந்திரத்திர்க்கும், மொழி அடிமைத்தனத்திற்க்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். விரும்பும் ஒரு மொழியை படிப்பது சுதந்திரம், வடநாட்டு மொழியை படிக்க கட்டாயப்படுத்துவது அடிமைத்தனம். பெரும்பான்மையினர் பேசும் இந்தியை தேசிய மொழி என அறிவித்து, அதை அனைவரும் கற்கவேண்டும் என்பது ஜனநாயகத்தில் சரி என்றால், பெரும்பான்மையினர் பின்பற்றும் இந்து மதத்தை ஏன் தேசிய மதமாக அறிவித்து அனைவரும் இந்து மதத்தையே பின்பற்ற வேண்டும் என்று அரசு கூறவில்லை? பேரும்பான்மையினர், சிறுபான்மையினரை அடிமை படுத்த முடியாது என்பது தான் உண்மையான ஜனநாயகம்.பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடிமை படுத்த முடியாது என்பது தான் உண்மையான ஜனநாயகம். மொழி சுதந்திரத்தை யார் பெற்று கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எங்கள் வாக்கு. தமிழ் மொழியால் பயன் இல்லை என்று எண்ணி தாய் மொழியை இகழ்கின்றனர் படித்தவர்கள், தாய் மொழிக்கு தேசிய மொழி அந்தஸ்த்து பெற்று, தாய் மொழியை போற்ற பார்க்கின்றனர் அறிவாளிகள். வாழ்க தமிழ், வாழ்க கன்னடம், வாழ்க மலையாளம், வாழ்க தெலுங்கு எங்கள் வாக்கு மாநில கட்சிகளுக்கே. தென் இந்திய மொழிகளை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை என்றால் காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம் போல் நாங்கள் மத்திய அரசிர்க்கு வரியை கட்டமாட்டோம். மொழி உரிமை விழ்ப்புணர்வு தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனம் தமிழக மக்களுக்காக நீர்பந்தல் அமைத்துள்ளது அந்த பந்தலுக்கான பெயரை தமிழில் வைக்காமல் இந்தி வார்த்தையில் DHARA என்று பெயர் வைத்துள்ளது. தமிழக மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் வட நாட்டு அதிகாரியின் இந்த செயலை நாம் அனைவரும் கண்டிப்போம். இந்த போராட்டம் இந்திக்கு எதிரான போராட்டம் அல்ல, தென் இந்திய மாநில மக்கள் அனைவருக்குமான மாநில மொழி உரிமை போராட்டம். இதில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் தென்மாநில மக்கள் அனைவரும் கலந்துகொண்டு மக்களிடம் மொழி உரிமை விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவோம். இது இந்தி எதிர்ப்பு போராட்டம் அல்ல தாய் மொழி உரிமை போராட்டம். தமிழ் மொழிக்கான உரிமை போராட்டம் அல்ல, தென் இந்திய மொழிகள் அனைத்துக்குமான போராட்டம். அரசியல் தலைவர்களே மொழி பெருமை பேசி மக்களை ஏமாற்றியது போதும், எங்களுக்கு மொழி உரிமையை பெற்று கொடுங்கள். எழுத்தாளர்களே தாய் மொழியை நேசித்தது போதும், மொழி சுதந்திரத்தை பற்றி சிந்தியுங்கள். அனைத்து மாநில மொழிகளும் தெசிய மொழிகளே. ஒரு மாநில மொழி மற்றொரு மாநில மொழியை அடிமை படுத்த கூடாது. சாதியம் என்று எண்ணியதாள்தான் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றோம். சாத்தியம் என்று எண்ணுவோம் மொழி உரிமையை பெருவோம். படித்த அறிவில்லாதவர்களே மொழி சுதந்திரத்திர்க்கும், மொழி அடிமைத்தனத்திற்க்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். விரும்பும் ஒரு மொழியை படிப்பது சுதந்திரம், வடநாட்டு மொழியை படிக்க கட்டாயப்படுத்துவது அடிமைத்தனம். பெரும்பான்மையினர் பேசும் இந்தியை தேசிய மொழி என அறிவித்து, அதை அனைவரும் கற்கவேண்டும் என்பது ஜனநாயகத்தில் சரி என்றால், பெரும்பான்மையினர் பின்பற்றும் இந்து மதத்தை ஏன் தேசிய மதமாக அறிவித்து அனைவரும் இந்து மதத்தையே பின்பற்ற வேண்டும் என்று அரசு கூறவில்லை? பேரும்பான்மையினர், சிறுபான்மையினரை அடிமை படுத்த முடியாது என்பது தான் உண்மையான ஜனநாயகம்.பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடிமை படுத்த முடியாது என்பது தான் உண்மையான ஜனநாயகம். மொழி சுதந்திரத்தை யார் பெற்று கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எங்கள் வாக்கு. தமிழ் மொழியால் பயன் இல்லை என்று எண்ணி தாய் மொழியை இகழ்கின்றனர் படித்தவர்கள், தாய் மொழிக்கு தேசிய மொழி அந்தஸ்த்து பெற்று, தாய் மொழியை போற்ற பார்க்கின்றனர் அறிவாளிகள். வாழ்க தமிழ், வாழ்க கன்னடம், வாழ்க மலையாளம், வாழ்க தெலுங்கு எங்கள் வாக்கு மாநில கட்சிகளுக்கே. தென் இந்திய மொழிகளை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை என்றால் காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம் போல் நாங்கள் மத்திய அரசிர்க்கு வரியை கட்டமாட்டோம்.
    in Politics
    நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு அல்ல.
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us