நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது
13 September 2021by
Vijayakumaran
நீதி, சட்டத்தை ஆதாரமாக வைத்திருக்கும் நம் நாட்டில், சட்டத்தை உருவாக்கக்கூடிய எம் எல் ஏ, எம் பி, யை குற்றவாளிகளாக தேர்ந்தெடுத்துவிட்டு, நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. நீதிமன்றம், நீதியை நிலைநாட்டுகின்ற இடம் அல்ல, அது சட்டத்தை செயல்படுத்தும் இடம். அங்கு நீதி கிடைக்காது. சட்டத்தை உருவாக்குகின்ற சட்டமன்றமும், நாடாளுமன்றமும் தான் நீதிமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் அங்கு நீதிபதிகள் என்பதை, மக்கள் புரிந்து கொண்டால் நேர்மையானவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்போதுதான் நீதி அனைவருக்கும் காலதாமதம் இல்லாமல் கிடைக்கும்.