நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு அல்ல.
6 March 2017by
Vijayakumaran
நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு என்று என்னாதீர்கள். அது தென் இந்திய மக்கள் அனைவரையும் அடிமை படுத்துவதற்க்கான மத்திய அரசின் சூழ்ச்சி. இந்தியாவில் CBSE, MATRIC, மாநில அரசு கல்வி முறை என்று பல பாடதிட்டங்கள் இருக்கும் போது CBSE பாடதிட்டம் மூலம் மாணவர்களை மருத்துவர்களாக தேர்ந்து எடுக்கும் முறை எப்படி சரியான தாக இருக்கும். நாடு முழுவதும் பல கல்வி முறையில் படித்த மாணவர்கள் எப்படி ஒரு கல்வி முறையால் தேர்வு செய்ய முடியும். மாடு மேய்கின்ற படிக்காதவருக்கே இது தவறு என்று தெரியும் ஆனால் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கும் ஏன் இந்த அறிவு இல்லை. காரணம் மாநில அரசு பாடத்திட்டதை ஒழிக்கவேண்டும், தென் இந்திய மாணவர்கள் அனைவரும் மத்திய அரசின் பாடதிட்டத்தை தான் படிக்க வேண்டும் என்பதுதான், அப்போது தான் இந்தியை CBSE யில் கட்டாய பாடமாக்கி தென் இந்திய மக்களை அடிமை படுத்த முடியும். இதை தென் இந்திய மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒரே குரலில் நம் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிப்போம்.