அண்டை நாட்டுடன் போரிட்டால் நாட்டுப்பற்று ஏற்படும்!
மாற்று மதத்தினரிடம் மத தீவிரவாதத்தை தூண்டினால் மத ஒற்றுமை ஏற்படும்!
மாற்று சாதியினரிடம் சாதிவெறியை தூண்டினால் சாதி ஒற்றுமை ஏற்படும்!
இது மனிதனின் இயல்பு. இந்த மூன்றையும் பயன்படுத்தி தான் பி ஜே பி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. இது சிறிது காலத்திற்கு இன்பமாக இருக்கும் இதன் தொடர்ச்சி, தொடர்வினை, ஒட்டுமொத்த வட இந்தியாவையே அழித்துவிடும் என்பது விதி.
வினையை விதைத்தவன் வினை யையே அறுவடை செய்வான்.
தென்னிந்தியாவை சேர்ந்த முன்னோர்களும், சான்றோர்களும், ஒருவன் இந்த மண்ணில் பிறக்கும் போதே அவனுக்கு மத நல்லிணக்கத்தையும், சாதி நல்லிணக்கத்தையும், ஊட்டி வளர்த்துள்ளார்கள் என்பதற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே சான்று.
வாழ்க தமிழன் !
வாழ்க தமிழனின் பண்பு!