29 December 2017
by
Vijayakumaran
இஸ்லாமிய ஆணோ,பெண்ணோ, மூன்று முறை தலாக் என்று சொன்னால்,அவர்களுடைய மணவாழ்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பொருள் இது அவர்களுடைய கலாச்சாரம். இது பெண் கொடுமையா ?புதிய சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? இஸ்லாமிய தம்பதிகள் இனி சேர்ந்து வாழ்வார்களா? இதுதான் நம் கேள்வி.
இந்து மதக் கலாச்சாரப்படி ஒரு ஆண் ஒரு பெண் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி விட்டால் போதும்,அன்று முதல் அவள் அவனின் மனைவி.இது எப்படி! யார் வேண்டுமானாலும் யார்கழுத்திலும் கயிறை கட்டிவிட்டால் விபரீதம் ஆகிவிடாதா ? இது பெண் கொடுமை அல்லவா,இது என்ன கலாச்சாரம் என்று நம்முடைய குடும்ப உறவு முறையைப்பற்றி தெரியாதவர்களுக்கு தவறாகத்தெரியும்.
தாலி கட்டுவது என்பது இன்று முதல் இருவரும் கணவன்,மனைவி, என்பதற்கான குறியீடு.அதுபோல்தான் இஸ்லாமியர்கள் மூன்று முறை தலாக் என்று சொன்னால் மணவாழ்கை முடிவுக்கு வந்தற்கான குறியீடு, இந்தக் குறியீட்டை மாற்றுவதால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பது முட்டாள்தனமான செயல்.இரண்டு மணங்கள் சேர்ந்து வாழ்வதையும், பிரிந்து வாழ்வதையும் எந்த ஒரு சட்டதாலும் தடை செய்ய முடியாது.
திருமண முறையை மாற்றுவதால் திருமணங்கள் குறைந்துவிடாது. விவாகரத்து முறையை மாற்றுவதால் விவாகரத்து குறைந்துவிடாது என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
பெண் தாலி கட்டாத நிலையில் ஆண் மட்டும் தாலி கட்டினால்தான் திருமணம் நடந்ததாக பொருள் என்றால், இதில் பெண் உரிமை மறுக்கப்படுகின்றது எனவே ஆண் தாலி கட்டுகின்ற பெண் கொடுமையை இனியார்
செய்தாலும் தண்டனைக்கு உரியது என்று சட்டம் கொண்டு வந்தால்,நம் கலாச்சாரம் அழிந்துவிடாதா?
பதிவு திருமணத்திற்கும், சம்பிரதாயத் திருமணத்திற்கும், முறைகள்தான் வேறு, பொருள் ஒன்றுதான். அது போல் முத்தலாக் முறைக்கும், நீதிமன்ற விவாகரத்து முறைக்கும், பொருள் ஒன்றுதான். இந்த நிலையில் முத்தலாக் முறையில் அவர்கள் சமுதாயத்தில் நடக்கின்ற விவாகரத்தை தண்டனைக்கு உரியது என்று BJP சட்டம் உருவாக்குவதன் நோக்கம் இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும்,அதன்மூலம் அவர்கள் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்பதுதான்.
நாளொன்றுக்கு பல ஆயிரம் மாடுகளைக் கொன்று சாப்பிடுகின்றார்கள் இந்த நாட்டில்! தமிழர்களின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டை மத்திய அரசு மிருக வதைத் தடைச் சட்டத்தின் மூலம் ஜல்லிகட்டை தடை செய்ததின் உள்நோக்கம் மாடுகளை காப்பாற்ற அல்ல,தமிழனின் கலாச்சாரத்தை அழிக்கவேண்டும் என்பது எப்படி உண்மையோ,அதுபோல் தான் இஸ்லாமியப் பெண்களை பாதுகாக்க என்ற போர்வையில் இஸ்லாமியர்களின் கலாசாரத்தை அழிக்கும் செயல்தான் மூத்தலாக் தடைச்சட்டம்.
BJPகொள்கை இன்று சிறுபான்மை மதத்தை அழிக்கும், நாளை சிறுபான்மை சாதியை அழிக்கும், பிறகு சிறுபான்மைத் மொழியை அழிக்கும், இப்படியாக ஒவ்வொன்றாக அழித்தால் யார் மிஞ்சுவது. BJP யின் பிரிவினைக் கொள்கை என்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல்ஆகும். ஜனநாயகம் பாதுகாக்க வேற்றுமையில் ஒற்றுமை காக்க வேண்டும், ஒவ்வொரு மாநிலத்தையும் மாநிலக் கட்சிகள் ஆளவேண்டும், மத்தியில் கூட்டாசி உருவாக வேண்டும். அதுதான் அனைத்து மக்களுக்குமான அரசாக இருக்கும்.
in Politics