அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் ஆளுமைமிக்க முதல்வராக ஸ்டாலின் வெற்றி வாகை சூடி இருப்பதற்கு வாழ்த்துக்கள்.
உழைப்பும், நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே சான்று.
ஜெயலலிதா அவர்கள் இறந்த உடனேயே குறுக்கு வழியில் ஸ்டாலின் முயற்சி செய்திருந்தால் நான்கு ஆண்டுகள் முதல்வர் பதவியை அனுபவித்திருக்கலாம், ஆனால் அவர் அதற்கு ஆசைப்படாமல் நேர்மையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக தான் பதவியேற்பேன் என்று சொன்னது அவருடைய நேர்மைக்குச் சான்று.
அரசியல் தலைவருக்கு மகனாகப் பிறந்தால் அரசியல் தலைவர் ஆவதற்கும்,
மருத்துவருக்கு மகனாகப் பிறந்தால் மருத்துவர் ஆவதற்கும்,
நடிகருக்கு மகனாகப் பிறந்தால் நடிகர் ஆவதற்கும்,
தொழிலதிபருக்கு மகனாகப் பிறந்தால் தொழிலதிபர் ஆவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவரவர் உழைப்பால் தான் என்பதை முதல்வர் ஸ்டாலின் நிரூபித்துவிட்டார். ராகுல்காந்திக்கும் இந்த வாய்ப்புக் கிடைத்தது ஆனால் அதை அவரால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை, எனவே வாய்ப்பு அனைவருக்கும் வரும் ஆனால் அதில் வெற்றி பெறுவது அவரவர் உழைப்பால் மட்டுமே.
இந்த வெற்றி மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாட்டால் கிடைத்தது, உண்மையான வெற்றி என்பது மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றார் போல் வரும் ஐந்து ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தால் தான் பெறமுடியும்.
மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்,
1) மாநில மொழிகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து மாநில மொழிகளும் இந்திக்கு நிகரான தேசிய மொழியாக அங்கீகரிக்க, இந்தி அல்லாத அனைத்து மாநிலத்தையும் ஒன்றிணைத்து போராடி மொழிச் சுதந்திரம் பெற வேண்டும்.
2) சாதி அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு கொடுத்து சமுதாய நீதி காத்திட வேண்டும்.
3). மத்திய மாநில அரசு வேலை வாய்ப்பில், மாநில மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து சட்டமியற்ற வேண்டும்.
4) சாதி, மதம் சார்ந்த அரசியல் கட்சிகளை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்.
5) வரும் தேர்தல்களில் சாதி, மதம் சார்ந்த கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைப்பதை திமுக தவிர்க்க வேண்டும்.
6) ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் தேர்தலில் இட ஒதுக்கீட்டை தடை செய்ய வேண்டும்.
7) லஞ்சத்தையும், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நேர்மையான வெளிப்படையான ஆட்சி செய்தால் தான் உண்மையான வெற்றியை ஐந்து ஆண்டுக்கு பிறகு வரும் தேர்தலில் பெறமுடியும்.
வாழ்த்துக்கள் !