உடல்வலிமை, அறிவு, பொருள், போன்ற அனைத்து செல்வத்தையும் பெற்றுஇருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கியத்தை செயலின் மூலம் ஒருவன் வெளிப்படுத்த முடியும். ஒருவனுடைய செயலே அவனுடைய ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். ஆரோக்கியம் இல்லாதவர்களால் போராடவோ, புரட்சி செய்யவோ,முடியாது என்பது இயல்பு. நம்மில் பல நண்பர்கள் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றார்கள் என்றால் அதன் பொருள் அவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதின் வெளிப்பாடே. எனவே அவர்கள் அவர்களின் உடலையும், அறிவையும், சுய பரிசோதனை செய்து கொள்வது அவர்களுக்கு நல்லது.
இந்தியா முழுவதற்கும் ஒரே மொழி, ஒரே வரி,ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே கல்வி கொள்கை, போன்றவைகள் பன்னீரில் சாக்கடையை கலப்பது போல் ஆகும்.
இந்தியா முழுவதும் சட்ட ஒழுங்கும், அரசு இயந்திரமும் ஒரே சீராக செயல்படாத நிலையில் ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை என்பது தென்னிந்தியர்களின் பொருளாதாரத்தை சுரண்டும் செயல்தான்.
வட இந்தியர்கள் வரி கட்ட மாட்டார்கள், தொடர் வண்டியில் பயணம் செய்தால் பயண சீட்டு வாங்க மாட்டார்கள்,குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள மாட்டார்கள், தேர்வுகளில் காப்பி அடித்து தேர்ச்சி பெற்று, ஆமை, முயலை முந்திய கதையைப் போல் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து சட்ட ஒழுங்கு சரியாக உள்ள நம் மாநிலத்தவரை தோற்கடித்து, நம்முடைய வேலை வாய்ப்பை பறித்து விடுவார்கள், இதற்கான சூழ்ச்சிதான் ஒரே கல்வி கொள்கை.
பிஜேபி சென்ற ஐந்து ஆண்டு ஆட்சியில் ஜிஎஸ்டி என்ற ஒரே வரிக் கொள்கையால் வரிகளை சரியாக கட்டும் தென்னிந்தியர்களின் பொருளாதாரத்தை கொள்ளையடித்தார்கள் நாம் ஒரு வேளை சாப்பாட்டுக்கு 20 ரூபாய் வரி கட்டுவோம், ஆனால் வட இந்தியன் வரி கட்டாமல் நம்ம வரியையும் சேர்த்து சாப்பிடுகின்றான், இதுதான் ஒரே இந்தியா, ஒரே வரி கொள்கையின் நோக்கம். இதை படித்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வட இந்தியாவில், தென்னிந்தியாவை போல் சட்ட ஒழுங்கும் அரசு இயந்திரத்தின் செயல்பாடு எப்போது சரியாக நடைபெறுகின்றதோ, அப்போதுதான் ஒரே வரி, ஒரே நுழைவுத்தேர்வு (NEET )கொள்கை தென்னிந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது அது சாத்தியம் இல்லாததால், ஜிஎஸ்டி வரி கொள்கையும், மும்மொழி கொள்கையும், நீட் தகுதி தேர்வு முறையும், கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில உரிமைக்கும் எதிரானது. இது நம் பொருளாதாரத்தை சுரண்டும் செயல் என்பதை அறிவின் ஆரோக்கியத்தால் புரிந்து, தமிழர்கள் அனைவரும் கட்சி மத, சாதி, பாகுபாடு இன்றி மாநில உரிமையை மீட்டெடுக்க போராட வேண்டியது நம் அனைவரின் கடமை.
இந்த கட்டுரையை நான் எழுத முடியாமல் மனச்சோர்வும், சோம்பலும்ஆன ஆரோக்கியமின்மை என்னை தடுத்தாலும், தமிழ் நாட்டின் நலனுக்காக என்னால் முடிந்ததை இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்று எண்ணி, மன சோர்வை விரட்டி விட்டு இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். நன்றி!