1) மும்மொழி கல்விக் கொள்கை மாநில மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும். இருமொழிக்கொள்கை மாநில உரிமை, இதை மீறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் கல்வி கொள்கை இருக்க வேண்டும், மீறினால் உச்ச நீதிமன்றம், அல்லது ஐ நா தலையிடுவதற்கும், மத்திய அரசை எச்சரிப்பதற்கும் உரிமை உள்ளது. எனவே மும்மொழி கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 2). உலக ஆய்வின் முடிவு தாய்மொழியால் படிக்கும் மாணவர்களால் மட்டுமே அறிவிலும், சிந்தனைத் திறனிலும் சிறந்து விளங்க முடியும் என்று சொல்கின்றது. எனவே பல மொழி கற்பது கல்வியின் தரத்தை உயர்த்தாது என்பது அறிவியல் உண்மை. எனவே மும்மொழிக்கொள்கை கல்விக்கு எதிரானது. 3). மாணவர்கள் கல்வி கற்பதே அறிவியல், வரலாறு, கணிதம், போன்ற அறிவைப் பெறுவதற்கு தான். ஒன்றுக்கு மூன்று மொழிப் பாடத்தை மாணவர்கள் படித்தால் அறிவை கொடுக்கின்ற மற்ற பாடத்தை மாணவர்கள் எப்போது படிப்பது. மும்மொழிக் கொள்கை மாணவர்களுக்கு பாடச்சுமையே.தவிர தரமான கல்வியை கொடுக்காது, பணமதிப்பிழப்பு பொருளாதார வளர்ச்சியை கொடுத்தது போல், அனைத்து மாநில மாணவர்கள் கல்வி தரத்தையும் மும்மொழி கல்விக் கொள்கை கெடுத்து விடும் என்பது உறுதி. 4) கல்விக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும், தேசிய அளவில் நுழைவுத்தேர்வு NEETவைக்காமல் மாநில அளவில் நுழைவுத்தேர்வு வைக்க வேண்டும். காரணம், மாநிலத்துக்கு மாநிலம் சட்ட ஒழுங்கு, கலாச்சாரம், சமூக நீதி, ஆகியவற்றில் மிகுந்த வேறுபாடு இருப்பதால் வட மாநிலத்தில் உள்ள மாணவனுக்கு கேள்வித்தாள் வெளியாகி விடுகின்றது, அங்கு புத்தகத்தை வைத்து தேர்வு எழுதுவது இயல்பான ஒன்று, இவர்களோடு தமிழ்நாட்டு மாணவர்கள் சட்டையை கழற்றி பரிசோதித்த பிறகு தேர்வு எழுதும் போது எப்படி போட்டி போட முடியும். இதனால் கல்வி அறிவு குறைவாக உள்ள வடமாநிலத்தை சேர்ந்தவன் அதிக மதிப்பெண் பெற்று NEETஇல் தேர்ச்சி பெற்று குறுக்கு வழியில் நம் பிள்ளைகளின் உரிமையை தட்டிப் பரிக்கின்றான். தமிழ்நாட்டு மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் நீட் வகுப்புக்குச் சென்று மூளையை கசக்கி தேர்வு எழுதியும் அதிக மதிப்பெண் பெற முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கு யார் காரணம், நம்முடைய அறிவு இன்மையும் இயலாமையும் மட்டுமே வட இந்தியர்களின் ஆதிக்க கொள்கை முடிவுக்கு காரணம். இதற்கு உங்களிடம் பதில்இருந்தால் மும்மொழிக் கொள்கையை ஆதரியுங்கள் ! இல்லை என்றால் எதிர்த்து குரல் கொடுங்கள் ! இது அரசியல் அல்ல நம் வாழ்வுரிமை !