13 September 2022
by
Vijayakumaran
செப்டம்பர் 14 யை ஹிந்தி தினமாக கொண்டாடும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்யை தெரிவித்து அனைத்து மாநில மொழிகளையும் ஹிந்திக்கு நிகரான தேசிய அலுவல் மொழியாக அறிவித்து, அனைத்து தேசிய அலுவல் மொழி தினமாக செப்டம்பர் 14 யை கொண்டாட வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். முதல்வரின் இந்த கோரிக்கைக்கு காரணம் மே 2013 அன்று நெய்வேலியில் ஒருவருடைய சிந்தனையில் உருவான சிறுபொரி தான் என்றால் நம்பமுடியுமா ! ஆம் நான் எழுதிய “மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் “என்ற கட்டுரையே காரணம். புதிய உத்தி பிறந்த இடம் நெய்வேலியில்தான்.
அறிவை அனுபவத்தால் மட்டுமே பெறமுடியும்!அனுபவத்தை விதியின் பயனால் மட்டுமே பெறமுடியும் ! நான் பிறந்து வளர்ந்த ஊரான நெய்வேலியில் அனைத்து மதத்தவரும், மொழியினரும் வாழும் சிறு இந்தியாவாக நெய்வேலி இருப்பதால் என்னை சுற்றி உள்ள நண்பர்களால் நான் பெற்ற அறிவே இந்த கட்டுரையை நான் எழுதுவதற்கு காரணம், எனவே நெய்வேலி வாழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
நம்முடைய மொழியின் உரிமைக்காக அண்ணாவும், கலைஞரும் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்ட நிலையில் ஏன் ஹிந்தி மொழியை எதிர்த்து நம் மொழிக்கான உரிமையை பெற முடியவில்லை என்று ஆய்வு செய்தேன் ஆய்வின் முடிவில் எனக்கு கிடைத்த விடை, தேசிய அளவில் கொள்கை முடிவில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றால் அனைத்து ஹிந்தி பேசாத மாநில மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் திமுக கவனம் செலுத்தாமல், மாநிலத்தில் மொழி உணர்வை தூண்டி தன்னுடைய அரசியல் செல்வாக்கை பெருக்கிக்கொள்ள இந்தியை தனி மாநிலமாக எதிர்த்தது தான் தவறு என்பதை புரிந்து கொண்டேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளில் ஹிந்தி, தமிழை தவிர அனைத்து மாநில மொழிகளையும் அழித்து விட்ட நிலையில், இன்று அனைத்து மாநில மக்களையும் ஒன்றிணைத்து ஹிந்திக்கு எதிராக போராடுவது சாத்தியமில்லை. அனைவரும் ஹிந்திக்கு அடிமையாகி விட்டார்கள். நம் தமிழ் நாட்டில் உள்ள படித்த முட்டாள்களும் ஹிந்தியை ஏற்றுக்கொண்டதால் ஹிந்தியை எதிர்க்க வாய்ப்பே இல்லை, இந்த நிலையில்தான் புதிய உத்தியாக ஹிந்தியை எதிர்க்காமல் ஹிந்திக்கு இணையாக அனைத்து மாநில மொழிக்கும் தேசிய அலுவல் மொழி என்ற அங்கீகாரம் கேட்டால் ஹிந்தியை தாய்மொழி அல்லாத அனைத்து மாநில மக்களும் ஒன்றிணைவார்கள், அதன் மூலம் நாம் மொழி சுதந்திரம் பெற்று விடலாம் என்று தோன்றியது.
ஹிந்தியை எதிர்க்காமல்,
நம் மொழியின் பெருமை பேசாமல்,
ஹிந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும்மான உரிமையை கேட்பது தான் new strategy.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பதுதான் புதிய உத்தி.
இரண்டாவது உத்தியாக இந்தியாவின் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14 ன்படி இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாநில மொழிகளுக்கும் ஹிந்தி மொழிக்கு இணையாக அங்கீகாரம் பெறலாம்.
என்னுடைய புதிய உத்தியை செயல்படுத்தும் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
in Politics