இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டது சரியா ?
தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக டாக்டர் அம்பேத்கர் இருப்பதால் நான் அவரை மதிக்கின்றேன்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற வேண்டும் என்பதற்காக, மோடி யை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட புத்தகத்திற்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இடமே முன்னுரை வாங்கினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி இளையராஜாவிடம் பிஜேபி ஆதரவைப் பெற்று இருப்பது என்பது முழுக்க அரசியல்.
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இருப்பதன் நோக்கம், தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை மோடி பெற வேண்டும் என்பது தான். அம்பேத்கரை பிரதமருடன் ஒப்பிட்டு இருப்பதால் அம்பேத்கர் புகழுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது இளையராஜாவின் அரசியல் நிலைப்பாடு என்ற புரிதலோடு கடந்து செல்ல வேண்டுமே தவிர இதை எதிர்த்தால் பிஜேபிக்கு தான்ஆதரவு அதிகரிக்கும்,அனைத்து கட்சியிலும் உறவினர்களும், நண்பர்களும் இருப்பதை எப்படி ஏற்றுக் கொள்கின்றோமோ அதுபோல் இளையராஜா அவர்களின் பிஜேபி ஆதரவு நிலைப்பாட்டையும் ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.
என்னுடைய ஆய்வின்படி டாக்டர் அம்பேத்கரின் செயலில் பிடித்ததும் உண்டு,பிடிக்காததும் உண்டு.
பிடித்தது :
1) சாதி அடிப்படையில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதி.
2) சாதியால் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்ற சமத்துவம்.இந்த இரண்டும் தான் இன்றைய சமுதாய அமைதிக்கு காரணம்.
பிடிக்காதது :1)சமத்துவத்தை விரும்பிய அம்பேத்கர் அனைத்து மாநில மொழிக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தாமல் இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தது.
2)ஜனநாயகத்துக்கு மதிப்பளித்த அம்பேத்கர் மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக தேர்தலில் இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தியது.
அம்பேத்கர் செய்த இந்த இரண்டு தவறுகளையும் பிரதமர் மோடி சரி செய்தால் வரும் காலத்தில் மோடியையும் அம்பேத்கர் ஆக மக்கள் பார்ப்பார்கள்.