அன்னநடையை கற்றுக் கொள்ள ஆசைப்பட்ட வாத்தைப்போல், அன்ன நடையையும் கற்றுக்கொள்ளமுடியாமல், சொந்த நடையையும் மறந்து தத்தி தத்தி வாத்து நடப்பது போல் அனைத்து மாநில மக்களும் தங்கள் தாய் மொழியையும் இழந்து புது மொழியையும் கற்றுக் கொள்ள முடியாமல், எந்த மொழியையும் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாமல், தவிக்கின்ற நிலைதான் வரும்.
பலமொழிகளை கற்றிருந்தாலும் தாய்மொழியாலேயே சிந்திக்கின்றனர் என்றும், பல மொழிகளைக் கற்கும் மாணவர்கள், மொழி ஆளுமைக்கே கவனம் முழுவதையும் செலுத்துவதால் சிந்திக்கும் திறன் (creativity )குறைக்கின்றது என்று ஆய்வுகள் சொல்கின்றன.
தாய்மொழியில் படித்தவர்கள் மொழி ஆளுமையால் சிறந்து விளங்கினர்,
இரண்டு மொழியை படித்தவர்கள் இரண்டுமொழி ஆளுமையையும் இழந்து வாழ்கின்றனர்,
இந்த நிலையில் மும்மொழிக் கொள்கை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களுக்கும் சுமையே!.சாபமே!!
பணமதிப்பிழப்பு போல நாட்டு மக்கள் அனைவரும் துன்பப்பட தான் போகின்றார்கள்.மும்மொழிக் கொள்கையால்.