ராமர் படத்தை செருப்பால் அடித்தால் பத்து ரூபாய் கொடுப்பதாக சொன்னால் ஊரே ஒன்று சேர்ந்து ராமர் படத்தை செருப்பால் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,காரணம் மனிதன் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விரும்புவது இல்லை என்பது மனிதனின் இயல்பு.
கல்வியும், வேலைவாய்ப்பும், சமத்துவமும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்பட்டதால் அவன் வனங்கிய தெய்வத்தை கூட எதிர்க்க தயங்க வில்லை என்பதுதான் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். எனவே பி ஜே பி யின் மத அரசியலும், ஆன்மீக அரசியலும், மக்களிடம் நீண்ட நாட்களுக்கு எடுபடாது. மக்களின் தேவையை பூர்த்தி செய்யாத அரசியல் கொள்கைகளும், அரசியல் கட்சிகளும், மக்களால் புறக்கணிக்கப்படும் என்பது வரலாற்று உண்மை.
பெரியாரின் சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும், எதிராக எந்த ஒரு கட்சியும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்பது உறுதி.