மக்களாட்சிதான், மக்களுக்கான ஆட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மக்களை ஆள்பவர்கள் காமராசர், அப்துல் கலாமை போல் சுயவாழ்க்கையை துறந்து மக்களுக்காகவே வாழ்பவராக இருந்தால் மட்டுமே மக்களாட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்.
செல்வம் கொழித்த மன்னர்களையும், சுயநலவாதிகளையும், தேர்ந்தெடுத்துவிட்டு மக்களுக்கான ஆட்சியை அவர்களிடம் எதிர்பார்ப்பது யார் தவறு ?சிந்தியுங்கள்!.
சுய வாழ்வைத் துறந்து, மக்களுக்காகவே வாழ்பவர்களுக்கு தான் என்னுடைய வாக்கு என்று ஒவ்வொருவரும் நினைத்தாலே போதும், காட்சிகள் மாறும், உண்மையான மக்களாட்சி மலரும்.
சுய வாழ்க்கையைத் துறந்து, மக்களுக்காகவே வாழ்பவர்கள் தான் மக்களை ஆள்வது நன்று என்று நம்முடைய அறிவுக்கு தெரிந்திருந்தாலும், நம்முடைய உணர்வு ஏற்றுக் கொள்ளாததற்கு காரணம், வருங்காலத்தில் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் நாட்டை ஆள முடியாது என்ற சுயநலமே.
சுயநலவாதிகளின் ஆட்சி ஒருபோதும் மக்களுக்கான ஆட்சியாக இருக்காது.
முதலில் நாம் மாறுவோம்!
பிறகு அரசியல்வாதிகளை விமர்சிப்போம் !
இது என்னுடைய கருத்தாக மட்டுமில்லாமல், நம்முடைய கருத்தாக இருக்கவேண்டும் என்பதால் என் பெயரை குறிப்பிடவில்லை.