மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை, இவற்றில் ஒன்று இந்த மந்தையை வழிநடத்துவது தான் ஜனநாயகம்.
மந்தையின் தலைவன் (அரசியல்வாதி )ஆட்டு மந்தையின் விருப்பப்படி ஆட்சி செய்தால் தான் அவன் தலைவனாக இருக்க முடியும். எது நன்மை, எது தீமை என்று அறிந்து செயல்பட்டால் அவன் பதவி பறிபோய்விடும், எனவே ஜனநாயக நாட்டில் ஆள்பவன் அறிவாளியாக இருந்து பயனில்லை, மக்களின் விருப்பத்தை செயல்படுத்துபவனாக இருந்தாலே போதும்.
மக்களையும், அரசியல் தலைவர்களையும் நன்மை, தீமை அறிந்து வழிநடத்த அரசியல் சார்பில்லாத சமூக சீர்திருத்தவாதி களால் மட்டுமே முடியும்.
இந்த சமுதாயத்தை அரசியல் சார்பில்லாத தலைவர்களால் மட்டுமே சிரப்பாக வழிநடத்த முடியும்.
தமிழனை ஆள பல அரசியல் தலைவர்கள் போட்டி போடுகிறார்கள் ஆனால் இந்த சமுதாயத்திற்கு சரியான அரசியல் அறிவை கொடுக்க அரசியல் சார்பில்லாத நேர்மையான சமூக சீர்திருத்த தலைவர்கள் யாரும் இல்லாததால் தமிழன் அரசியல் கைக்கூலிகளால் பிரிக்கப்பட்டு தொடர்ந்து வட இந்தியர்களால் மொழியால் அடிமைப்பட்டு கொண்டிருக்கின்றான்.
“ஆடு வெட்டுபவனைதான் நம்பும் வளர்ப்பவனை நம்பாது. ”என்ற பழமொழியை போல் மொழி உரிமையை மீட்டெடுக்க அரசியல்வாதிகள் சொல்வதையும் நம்பாமல், மொழி ஆர்வலர்கள் சொல்வதையும் புரிந்து கொள்ளாமல் சிதைந்துபோன இந்த தமிழ் இனம் அழிவின் விளிம்பில் உள்ளது, எச்சரிக்கை!